POLLING FLAMES

 

தமிழக முதலமைச்சராக விஜய் பதவி ஏற்கும் விழாவில் ராகுல் காந்தி பங்கேற்பு

1 hour ago 09 மே 2026 04:43 PM | views : 20

தமிழ்நாட்டில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய தமிழக வெற்றி கழகத்திற்கு, காங்கிரஸை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, கூட்டணியின் மொத்த பலம் 120 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை காலை 10 மணிக்கு, த.வெ.க தலைவர் விஜய்க்கு ஆளுநர் அர்லேகர் முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைக்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு டெல்லியிலிருந்து மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமானத்தின் மூலம் காலை 8.30 மணிக்கு சென்னை வந்தடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும், பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரவுள்ளதாகவும் தகவல் பரவிவருகிறது.

இதனை தொடர்ந்து பல முக்கிய ஆளுமைகளும் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ADMK AMMK TVK ANNAMALAI தவெக எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் MK STALIN மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS TAMIL NADU AIADMK இந்திய அணி PMK ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN காங்கிரஸ் பாராளுமன்ற தேர்தல் கனமழை பாமக தமிழகம் CONGRESS தமிழக வெற்றிக் கழகம் INDIAN CRICKET TEAM கோவை திருமாவளவன் கொலை COIMBATORE அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் EDAPPADI PALANISWAMI SURIYA கைது KEERTHY SURESH பிரதமர் மோடி NELLAI வன்னியர் சீமான் OPS நெல்லை அமமுக தேவர் தமிழ்நாடு BIGG BOSS TAMIL கொரோனா சட்டசபை தேர்தல் தமிழக சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN AJITH தூத்துக்குடி ஓபிஎஸ் சூர்யா TAMIL ACTRESS வடகிழக்கு பருவமழை மதுரை RAJINIKANTH அன்புமணி ELECTION COMMISSION தென்காசி கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் நடிகை TAMILAGA VETTRI KAZHAGAM PARLIAMENT ELECTION CSK விடுமுறை THOOTHUKUDI அஜித் திருப்பரங்குன்றம் பாலியல் தொல்லை