POLLING FLAMES

 

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் விஜய்!

1 hour ago 10 மே 2026 01:44 AM | views : 24

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல். ஆதரவு அளித்துள்ளதால் ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களை தாண்டி 120 இடங்கள் கிடைத்துள்ளன.

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 4-வது முறையாக ஆளுநர் அர்லேகரை சந்தித்து, ஆதரவு கடிதங்களை வழங்கி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக்கோரி அழைப்பு விடுத்தார்.

விஜய், இடதுசாரி தலைவர்கள், த.வெ.க. தலைவர்கள் ஆளுநர் அர்லேகரிடம் சுமார் ஒரு மணி நேரம் தீவிர ஆலோசனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து இன்று (மே 10) காலை 10 மணிக்கு பதவி ஏற்று வைக்க ஆளுநர் சம்மதம் தெரிவித்தார்.

நேரு உள்விளையாட்டு அரங்கில் காலை 10 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. விஜய் முதல்வர் பதவி ஏற்க, அவருடன் 9 பேர் அமைச்சராக பதவி ஏற்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் இதில் கலந்துகொள்கின்றனர். சென்னையில் 20 இடங்களில் பதவியேற்பு விழா எல்இடி திரைகளில் நேரலையில் ஒளிபரப்பப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக அதிமுக VIJAY சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI AMMK TVK ADMK தவெக எடப்பாடி பழனிசாமி AIADMK உதயநிதி ஸ்டாலின் MK STALIN மு.க.ஸ்டாலின் TAMIL NADU TTV DHINAKARAN டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS PMK இந்திய அணி காங்கிரஸ் ரஜினிகாந்த் பாராளுமன்ற தேர்தல் INDIAN CRICKET TEAM கனமழை தமிழகம் கோவை தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN பாமக CONGRESS EDAPPADI PALANISWAMI திருமாவளவன் COIMBATORE கொலை அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் நெல்லை பிரதமர் மோடி தேவர் வன்னியர் அமமுக OPS NELLAI தமிழ்நாடு SURIYA KEERTHY SURESH சீமான் சூர்யா சட்டசபை தேர்தல் கொரோனா தூத்துக்குடி BIGG BOSS TAMIL AJITH ஓபிஎஸ் தமிழக சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN TAMIL ACTRESS கைது CSK அஜித் நடிகை அன்புமணி ELECTION COMMISSION கள்ளக்காதல் THOOTHUKUDI கீர்த்தி சுரேஷ் விடுமுறை RAJINIKANTH மதுரை திருப்பரங்குன்றம் PARLIAMENT ELECTION வடகிழக்கு பருவமழை தென்காசி