POLLING FLAMES

 

மு.க.ஸ்டாலினை சந்திக்க முதல்-அமைச்சர் விஜய் திட்டம்

33 minutes ago 11 மே 2026 06:31 AM | views : 37

சென்னை,

தமிழகத்தில் ஆட்சி அமைக்க விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்துக்கு, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்டு கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆகியவை ஆதரவு அளித்துள்ளன. ஆட்சி அமைக்க தேவையான 118 என்ற எண்ணிக்கைக்கும் அதிகமான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்ததால் த.வெ.க. தலைவர் விஜய்யை, முதல்-அமைச்சராக நியமித்து கவர்னர் அர்லேகர் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.


அதன்படி, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கவர்னர் அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் பெண்கள் பாதுகாப்பு, போதை பொருள் தடுப்பு, 200 யூனிட் இலவச மின்சாரம் ஆகிய 3 முக்கிய கோப்புகளில் விஜய் கையெழுத்திட்டார்.


இதைத்தொடர்ந்து, தலைமை செயலகத்துக்கு சென்று பல்வேறு கோப்புகளில் கையெழுத்திட்டு அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், மாலை 3.30 மணியளவில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் விஜய் மரியாதை செலுத்தினார். அப்போது முதல்-அமைச்சர் விஜய்க்கு, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெரியார் சிலையை பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.


இந்த நிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, முதல்-அமைச்சர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டசபை கூட்டம் முடிந்ததும் அங்கிருந்து ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு விஜய் செல்ல இருக்கிறார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.


அதனை தொடர்ந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை முதல்-அமைச்சர் விஜய் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அண்ணாநகர் இல்லத்தில் சந்திக்க உள்ளார். இதைபோல மூத்த அரசியல் கட்சித் தலைவர்களையும் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக TTV DHINAKARAN டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் MK STALIN மு.க.ஸ்டாலின் PMK இந்திய அணி AIADMK TAMIL NADU ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் INDIAN CRICKET TEAM UDHAYANIDHI STALIN கனமழை CONGRESS கோவை பாமக முக ஸ்டாலின் EDAPPADI PALANISWAMI கொலை தமிழகம் COIMBATORE திருமாவளவன் தமிழ்நாடு பிரதமர் மோடி அமமுக அன்புமணி ராமதாஸ் வன்னியர் சீமான் KEERTHY SURESH தேவர் OPS NELLAI நெல்லை சட்டசபை தேர்தல் SURIYA TAMIL ACTRESS THIRUMAVALAVAN BIGG BOSS TAMIL AJITH கொரோனா கைது தமிழக சட்டசபை தேர்தல் தூத்துக்குடி ஓபிஎஸ் PARLIAMENT ELECTION கள்ளக்காதல் அன்புமணி வடகிழக்கு பருவமழை நடிகை ELECTION COMMISSION அஜித் தென்காசி மதுரை THOOTHUKUDI சூர்யா விடுமுறை திருப்பரங்குன்றம் CSK RAJINIKANTH கீர்த்தி சுரேஷ்