மத்தியில் மூன்றாவது முறையாக பா.ஜ.க. தலைமையிலான அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 2014-ம் ஆண்டு முதல் முறையாக மோடி பிரதமரான போது நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார் அஜித் தோவல். 2019-ம் ஆண்டில், மோடி தலைமையிலான இரண்டாவது ஆட்சியில், அஜித் தோவல் இந்த பதவிக்கு மீண்டும் நியமிக்கப்பட்டார்.
தற்போது 3-வது முறையாக பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அஜித் தோவலுக்கு கேபினட் மந்திரி அந்தஸ்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் பவுரி மாவட்டத்தில் உள்ள கிரி கிராமத்தில் 1945-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி பிறந்த அஜித் தோவல், கேரள கேடர் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். இவர் உளவு அமைப்பின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
பஞ்சாப், மிசோரம் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் திறம்பட பணியாற்றியவர். காந்தகார் விமானக் கடத்தல், புல்வாமா தாக்குதல் என நெருக்கடியான நேரத்திலும் சிறப்பாக செயல்பட்டவர். சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை வெற்றிகரமாக நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?
100-லிருந்து 10-ஐ எத்தனை முறை கழிக்க முடியும்?
வெள்ளை ராஜாவுக்கு கருப்பு உடை அது என்ன?
ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!
கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்
யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை
கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
பக்ரீத் பண்டிகையையொட்டி ஆட்டுச் சந்தையை மூட மகாராஷ்டிராவில் உத்தரவு
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!