Tamil News & POLLING

 

ஈராக், குவைத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல்: ஈரான் ஊடகம்

1 hour ago 19 மார்ச் 2026 09:22 AM 5 views
தெஹ்ரான்

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரானை வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்து வரும் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இதனை தொடர்ந்து ஈரான் நடத்தி வரும் பதிலடி தாக்குதல்களால் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அவற்றின் படை தளங்கள் அமைந்த வளைகுடா நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால், பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட சிக்கல்கள் எழுந்துள்ளன. தவிரவும், வான், கடல் வழி பயணங்களும் பாதிக்கப்பட்டு உள்ளன.

ஈரான் நாட்டின் இந்த தாக்குதலின் தொடர்ச்சியாக, ஈராக் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதனை ஈரான் ஊடகம் தெரிவிக்கின்றது.

ஈரானின் அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், ஈராக்கின் வடக்கே உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது டிரோன்கள் தாக்கியுள்ளன. பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு தாக்குதல்களும் நடத்தப்பட்டு உள்ளன.

இதேபோன்று வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்திலும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளன என தகவல் தெரிவிக்கின்றது.

உங்கள் கருத்து (Your Opinion)

இந்த செய்தியை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK ANNAMALAI தவெக ADMK AIADMK AMMK MK STALIN டிடிவி தினகரன் TAMIL NADU TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் உதயநிதி ஸ்டாலின் சீமான் ANBUMANI RAMADOSS எடப்பாடி பழனிசாமி PMK மு.க.ஸ்டாலின் முக ஸ்டாலின் பாமக கனமழை ரஜினிகாந்த் தமிழகம் தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி INDIAN CRICKET TEAM UDHAYANIDHI STALIN காங்கிரஸ் CONGRESS பிரதமர் மோடி PARLIAMENT ELECTION கைது அன்புமணி ராமதாஸ் வடகிழக்கு பருவமழை KEERTHY SURESH EDAPPADI PALANISWAMI NELLAI கொலை SEEMAN அமமுக நெல்லை சட்டசபை தேர்தல் திருநெல்வேலி TAMIL ACTRESS TAMILAGA VETTRI KAZHAGAM மதுரை தென்காசி COIMBATORE கோவை THOOTHUKUDI வன்னியர் OPS தமிழ்நாடு கள்ளக்காதல் கொரோனா தேவர் TAMIL CINEMA விடுமுறை நயினார் நாகேந்திரன் தீபாவளி பாலியல் தொல்லை டாப் நியூஸ் கீர்த்தி சுரேஷ் திருமாவளவன் THIRUMAVALAVAN நாடாளுமன்ற தேர்தல் டிரெண்டிங் NORTHEAST MONSOON AJITH தமிழக அரசு ஓபிஎஸ் ELECTION COMMISSION நாம் தமிழர் கட்சி MADURAI திருப்பரங்குன்றம்