தேர்தல் ஆணையம் - தேடல் முடிவுகள்

நெல்லை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை!

2024-04-06 07:33:48 - 1 week ago

நெல்லை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை! தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.இதற்கிடையே வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் சார்பில் வருமான வரித்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2-ந் தேதி சென்னையில் 5 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில்


தேர்தலுக்குள் கச்சத்தீவை மீட்டு கொடுத்தால் எங்கள் வாக்கு பா.ஜ.க.வுக்கு- சீமான் பேச்சு

2024-04-02 04:52:36 - 2 weeks ago

தேர்தலுக்குள் கச்சத்தீவை மீட்டு கொடுத்தால் எங்கள் வாக்கு பா.ஜ.க.வுக்கு- சீமான் பேச்சு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தேனி மாவட்டம் கம்பம், போடி, திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி, பழனி ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் நடந்த பிரசார கூட்டத்தில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-பணம் இருப்பவர்கள்தான் அரசியல் செய்ய முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. அரசியல் என்பது மக்களுக்காக உழைக்க மட்டுமே.


விவிபாட் சீட்டு விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு உத்தரவு

2024-04-02 04:40:06 - 2 weeks ago

விவிபாட் சீட்டு விவகாரம்: தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு உத்தரவு நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அந்தந்த வாக்குப்பதிவு மையங்களுக்கு கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் நடவடிக்கை


தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை- தேர்தல் ஆணையம் உத்தரவு

2024-03-30 03:42:19 - 2 weeks ago

தேர்தல் கருத்துக் கணிப்புகளுக்கு தடை- தேர்தல் ஆணையம் உத்தரவு பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது.மேலும் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தலும் இந்த தேர்தலுடன் நடக்கிறது. இதைப்போல 12 மாநிலங்களில் காலியாக உள்ள 25 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இந்த காலகட்டத்தில் நடக்கிறது.


அண்ணாமலை வேட்புமனு சர்ச்சை - தேர்தல் அதிகாரி விளக்கம்

2024-03-28 14:15:32 - 2 weeks ago

அண்ணாமலை வேட்புமனு சர்ச்சை - தேர்தல் அதிகாரி விளக்கம் கோவை,தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரேகட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கடந்த 20-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி நேற்று நிறைவடைந்தது. வேட்புமனுக்களை தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று பரிசீலனை


பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட வாகனத்தில் 180 கிலோ தங்கம், 250 கிலோ வெள்ளி பொருட்கள்

2024-03-26 10:39:35 - 3 weeks ago

பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட வாகனத்தில் 180 கிலோ தங்கம், 250 கிலோ வெள்ளி பொருட்கள் பாராளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெற உள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்ட நிலையில் தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது.அதன் அடிப்படையில் தருமபுரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட எல்லையில் பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்


இரட்டை இலைக்காக மீண்டும் ஓ.பி.எஸ். தீவிர முயற்சி - தேர்தல் ஆணையத்தில் புதிய மனு

2024-03-23 11:25:29 - 3 weeks ago

இரட்டை இலைக்காக மீண்டும் ஓ.பி.எஸ். தீவிர முயற்சி - தேர்தல் ஆணையத்தில் புதிய மனு சென்னை:அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றைப் பயன்படுத்த கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்கக் கோரி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அ.தி.மு.க.வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றைப் பயன்படுத்த


நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்!

2024-03-22 07:50:01 - 3 weeks ago

நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்! பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதை அடுத்து சுப்ரீம் கோர்ட்டில் சீமான் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மேல்முறையீட்டு மனுவுக்கு ஏப்ரல் 1-ந் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும், பாரதிய மக்கள்


இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி அவசர மனு

2024-03-21 14:58:21 - 3 weeks ago

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் - தேர்தல் ஆணையத்தில் புகழேந்தி அவசர மனு இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி அவசர மனு ஒன்றை தொடர்ந்துள்ளார். மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மனுவில," தொண்டர்களையும், கட்சியையும் பாதிக்கும் என்பதால் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும். இரட்டை


தேர்தல் தேதி அறிவிப்பு, தேர்தல் நடத்தை விதிகள் உடனடி அமல்!

2024-03-16 10:29:09 - 1 month ago

தேர்தல் தேதி அறிவிப்பு, தேர்தல் நடத்தை விதிகள் உடனடி அமல்! 17-வது பாராளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வருகிற ஜூன் மாதம் 14-ந்தேதி முடிவடைகிறது.இதனால் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று தேர்தல் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டார். மேலும் ஒவ்வொரு