அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக அறிவித்தார். துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் களம் காண்கிறார். குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார். துணை அதிபர் வேட்பாளராக ஜேடி வேன்ஸ் அறிவிக்கப்பட்டார். மீண்டும் அதிபர் தேர்தலில் களம் காணும் ஜோ பைடனுக்கு துவக்கம் முதலே அமோக வரவேற்பு கிடைக்கவில்லை.
மேலும், அவரது உடல்நிலையும் அவருக்கு எதிராக இருந்தது. டிரம்ப் உடனான நேரடி விவாதத்தில் இந்த விஷயம் பொதுவெளியில் அம்பலமானது. டிரம்ப் உடன் பேசும் போது தடுமாறிய பைடன், அதன்பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை புதின் என்று அழைத்தார். இதோடு துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸை டிரம்ப் என்று அழைத்தார். இந்த சம்பவங்கள் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஜோ பைடனுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுவதை தொடர்ந்து அவர் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று ஜனநாயக கட்சியினர் தொடர்ந்து கூறி வந்தனர்.
இந்த நிலையில், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார். மேலும், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸை முன்மொழிவதாக ஜோ பைடன் தெரிவித்தார். இது தொடர்பான எக்ஸ் தள பதிவில், "ஜனநாயக கட்சியினரே, எனது வேட்புமனுவை ஏற்க வேண்டாம். எஞ்சியிருக்கும் பதவிக்காலம் முழுக்க அதிபராக எனது கடமைகளில் முழு ஆற்றலை செலுத்த முடிவு செய்துள்ளேன்." "இந்த ஆண்டு தேர்தலில் எங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ்-க்கு என் முழு ஆதரவு, ஒப்புதலை வழங்குகிறேன். ஜனநாயகவாதிகள் ஒன்றுகூடி டிரம்ப்-ஐ தோற்கடிக்க வேண்டிய நேரம் இது. இதை செய்வோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
பூவோடு பிறந்து, நாவோடு கலந்து விருந்தாவான், மருந்தாவான். அவன் யார்?
ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!