POLLING FLAMES

 

கள்ளக்காதலால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட பெண்!

1 year ago 29 ஜூன் 2024 04:34 AM | views : 264
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 42). பெயிண்டரான இவர் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு தற்போது பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயசாந்தி (41). இவர், வண்ணாரப்பேட்டை சிமெண்டரி சாலையில் உள்ள பிரபல துணிக்கடையில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

சரவணன் வெளிநாட்டில் வேலை செய்தபோது, சம்பளத்தை மணலி புதுநகரில் உள்ள தனது தங்கையின் கணவரான மற்றொரு சரவணன் (40) என்பவருக்கு அனுப்பி வைத்தார். அவர் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். அந்த பணத்தை விஜயசாந்தி வீட்டில் கொடுக்க அடிக்கடி சென்று வந்ததால் இருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்பிறகு வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்த பெயிண்டர் சரவணன், மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் அறிந்து அதிர்ச்சி அடைந்தார். மனைவியை கண்டித்ததோடு அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. மேலும் தன்னுடன் கள்ளக்காதலை தொடரும்படி மெக்கானிக் சரவணனும் விஜயசாந்தியை வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த விஜயசாந்தி நேற்று முன்தினம் வீட்டின் படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயசாந்தி உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விஜயசாந்தியின் வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது கடிதம் ஒன்று சிக்கியது. அதில் அவர், "என் சாவுக்கு என் கணவர் சரவணன் மற்றும் என்னுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட உறவினரான சரவணன் ஆகியோர்தான் காரணம்" என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார், விஜயசாந்தியின் கணவரான பெயிண்டர் சரவணன் மற்றும் அவரது உறவுக்காரரான மெக்கானிக் சரவணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN TAMIL NADU மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் PMK ANBUMANI RAMADOSS AIADMK டிடிவி தினகரன் UDHAYANIDHI STALIN காங்கிரஸ் கனமழை தமிழக வெற்றிக் கழகம் பாமக முக ஸ்டாலின் ரஜினிகாந்த் இந்திய அணி தமிழகம் கோவை CONGRESS PARLIAMENT ELECTION EDAPPADI PALANISWAMI அன்புமணி ராமதாஸ் கொலை திருமாவளவன் COIMBATORE AJITH கைது KEERTHY SURESH TAMILAGA VETTRI KAZHAGAM INDIAN CRICKET TEAM தமிழ்நாடு அமமுக OPS சீமான் பிரதமர் மோடி THIRUMAVALAVAN சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS ஓபிஎஸ் கொரோனா BIGG BOSS TAMIL தமிழக சட்டசபை தேர்தல் NELLAI நெல்லை வன்னியர் தூத்துக்குடி தென்காசி கள்ளக்காதல் ELECTION COMMISSION SURIYA மதுரை கீர்த்தி சுரேஷ் வடகிழக்கு பருவமழை தேவர் RAJINIKANTH விடுமுறை CSK சூர்யா அஜித் தீபாவளி திருப்பரங்குன்றம்