இன்று (ஆகஸ்ட் 22) 385-வது சென்னை நாள் கொண்டாடப்படுகிறது. தற்போதைய சென்னை நகரம் ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் மெட்ராஸ் நகரமாக உருவானதைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சென்னை நாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
17-வது நூற்றாண்டில் தற்போதைய சென்னை நகரப் பகுதி, மதராஸப்பட்டினம் என்ற பெயரில் விஜயநகர பேரரசின் ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்தது. மதராஸப்பட்டினத்தை 22 ஆகஸ்ட் 1639-ல் வாங்கியது கிழக்கிந்திய கம்பெனி. அதன் பிறகு 1640-ல் கடலோரத்தை ஒட்டி புனித ஜார்ஜ் கோட்டை கட்டும் பணி தொடங்கப்பட்டு 1644-ல் கட்டி முடிக்கப்பட்டது.
புனித ஜார்ஜ் கோட்டையை சுற்றி ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் மெட்ராஸ் நகரம் உருவானது. ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் மெட்ராஸ் மாகாணத்தின் தலைநகராக விளங்கியது மெட்ராஸ் நகரம்.சுதந்திரத்துக்கு பிறகு 1950-களில் மேற்கொள்ளப்பட்ட மாநில மறுசீரமைப்பில் ஆந்திர பிரதேசம், கேரளா, கர்நாடகம், மெட்ராஸ் என தனித்தனி மாநிலங்கள் உருவாகின. இதில் மெட்ராஸ் மாநிலத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டது மெட்ராஸ் நகரம்.
அன்றைய அண்ணா தலைமையிலான திமுக அரசால் 14 ஜனவரி 1969-ல் மெட்ராஸ் மாநிலம், தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது. பிறகு, 17 ஜூலை 1996-ல் மெட்ராஸ் நகரை சென்னை என்று பெயர் மாற்றியது தமிழக அரசு.
சென்னை நாளுக்கு வாழ்த்து தெரிவித்து, `சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்த நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது. வாழ்வு தேடி வந்த பலருக்கும் வசந்தத்தை வழங்கிட வா என்று தன் மடியோடு ஏந்திக்கொண்ட தாய் சென்னை! இந்தத் தருமமிகு சென்னையே நமது சமத்துவபுரம்! பல கனவுகளை வெற்றிக் கதைகளாக எழுதிய - எழுதும் நம் சென்னையைக் கொண்டாடுவோம்!’ என்று தன் எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.
உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?
இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒருவன் நடப்பான் ஒருவன் ஓடுவான் அது என்ன?
குரூப்-1, 2, 4 தேர்வு பாடத்திட்டங்களில் மாற்றம் இல்லை- டி.என்.பி.எஸ்.சி. தகவல்
உச்சகட்ட பரபரப்பில் திருப்பரங்குன்றம்!
வேங்கை வயல் மர்ம முடிச்சுக்கள் எவ்வாறு விலகியது... தலித் இளைஞர்கள் செய்த கேவலமான செயல் !
டங்ஸ்டன் சுரங்கம் ரத்து: மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு வரவேற்புக்குரியது - டி.டி.வி. தினகரன்
அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் - ஓ.பன்னீர்செல்வம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!