POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

தவெக கொடி பறக்குமா? பறக்காதா? விஜய்க்கு செக் வைத்த போலீஸ்..!

1 year ago 26 ஆகஸ்ட் 2024 09:35 AM | views : 199
சினிமாவில் இருந்து விரைவில் விலக உள்ள விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கி, கடந்த 22ஆம் தேதி கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார்.

இந்த கொடியை அறிமுகம் செய்ததில் இருந்து பல்வேறு விமர்சனங்களும், புகார்களும் அவர் மீது எழுகின்றன.

கொடியில் உள் யானை சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பகுஜன் சமாஜ் கட்சி எச்சரிக்கையும் விடுத்துள்ளது. இது ஒரு புறம் இருக்க, கட்சி கொடியின் நிறம் ஸ்பெயின் நாட்டு கொடியின் நிறம் என்றும் விமர்சிக்கப்பட்டது.

தற்போது மீண்டும் ஒரு தலைவலி விஜய்க்கு ஏற்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியினை மக்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் வகையில், 234 தொகுதிகளிலும் கொடியை ஏற்றவும், தங்களது இல்லங்களில் பறக்க விடவும் தவெக நிர்வாகிகளுக்கு உத்தரவு; பொது இடங்களில் கட்சி கொடியை ஏற்ற காவல்துறையிடம் உரிய அனுமதி பெற அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால் பல இடங்களில் அனுமதி பெறாமல் கொடியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கோரிப்பாளையத்தில் 50 அடி உயர கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் தடையில்லா சான்றிதழ் இணைக்கப்படாததால் அனுமதி ரத்து என காவல்துறை தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI ADMK AMMK எடப்பாடி பழனிசாமி MK STALIN ANBUMANI RAMADOSS கனமழை டிடிவி தினகரன் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் TAMIL NADU AIADMK உதயநிதி ஸ்டாலின் PMK பாமக அன்புமணி ராமதாஸ் பாராளுமன்ற தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் ரஜினிகாந்த் கோவை சட்டசபை தேர்தல் காங்கிரஸ் திருமாவளவன் கைது தமிழகம் COIMBATORE EDAPPADI PALANISWAMI இந்திய அணி CONGRESS UDHAYANIDHI STALIN THIRUMAVALAVAN OPS வடகிழக்கு பருவமழை பிரதமர் மோடி சீமான் KEERTHY SURESH வன்னியர் தேவர் INDIAN CRICKET TEAM கொலை அமமுக தமிழ்நாடு TAMIL ACTRESS தென்காசி ஓபிஎஸ் மதுரை SURIYA ASSEMBLY ELECTIONS நெல்லை AJITH தீபாவளி PARLIAMENT ELECTION NELLAI கள்ளக்காதல் திருப்பரங்குன்றம் TAMILAGA VETTRI KAZHAGAM தூத்துக்குடி அஜித் அன்புமணி விடுமுறை தமிழக சட்டசபை தேர்தல் பாலியல் தொல்லை சூர்யா NORTHEAST MONSOON மோடி CSK ELECTION COMMISSION BIGG BOSS TAMIL கீர்த்தி சுரேஷ் PRIME MINISTER MODI MADURAI