Tamil News & POLLING

 

பாலியல் குற்றதிற்கு 5 ஆண்டுகள் சினிமாவில் நடிக்க தடை : நடிகர் சங்கம் தீர்மானம்

1 year ago 05 செப்டம்பர் 2024 02:16 AM 134 views
தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக கடந்த 2019-ம் ஆண்டு பாலின உணர்வு மற்றும் உள் புகார்கள் கமிட்டி உருவாக்கப்பட்டது. இதன் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், பொருளாளர் கார்த்தி, மற்றும் கமிட்டி தலைவர் ரோகிணி தலைமையில் உறுப்பினர்களான சுஹாசினி, குஷ்பு, லலிதா குமாரி, கோவை சரளா மற்றும் சமூக செயற்பாட்டாளர் ராஜி கோபி ஆகியோர் முன்னிலையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


பாலியல் புகார்களின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விசாரித்து, உண்மை இருந்தால் அவர்களுக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்க, தயாரிப்பாளர் சங்கத்துக்கு பரிந்துரைக் கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டரீதியாக அனைத்து உதவிகளையும் கமிட்டி செய்யும். பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்க தனி தொலைபேசி எண் ஏற்கெனவே உள்ளது. தற்போது இ - மெயில் மூலமாக புகார் அளிக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக மீடியாக்களில் பேச வேண்டாம்.

யூடியூப்பில் திரைத் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றி அவதூறாக பதிவிடப்படுவதால் பாதிக்கப்படுபவர்கள் சைபர் கிரைமில் புகார் அளித்தால் கமிட்டி, அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் கமிட்டியில் ஒரு வழக்கறிஞரை நியமனம் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது
உங்கள் கருத்து (Your Opinion)

இந்த செய்தியை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AIADMK ADMK AMMK TTV DHINAKARAN MK STALIN TAMIL NADU டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் சீமான் தமிழகம் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் PMK தமிழக வெற்றிக் கழகம் INDIAN CRICKET TEAM காங்கிரஸ் ரஜினிகாந்த் இந்திய அணி கனமழை UDHAYANIDHI STALIN பாமக அன்புமணி ராமதாஸ் கைது PARLIAMENT ELECTION பிரதமர் மோடி CONGRESS SEEMAN கொலை NELLAI EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH அமமுக வடகிழக்கு பருவமழை கோவை TAMILAGA VETTRI KAZHAGAM திருநெல்வேலி கள்ளக்காதல் TAMIL ACTRESS OPS நெல்லை COIMBATORE தமிழ்நாடு தென்காசி மதுரை சட்டசபை தேர்தல் தீபாவளி திருமாவளவன் வன்னியர் 2024 T20 WORLDCUP TAMIL CINEMA தேவர் பாலியல் தொல்லை கீர்த்தி சுரேஷ் தமிழக அரசு AJITH MADURAI ஓபிஎஸ் டாப் நியூஸ் டிரெண்டிங் ELECTION COMMISSION NORTHEAST MONSOON THIRUMAVALAVAN விடுமுறை நயினார் நாகேந்திரன் திருப்பரங்குன்றம் கொரோனா நாம் தமிழர் கட்சி THOOTHUKUDI