இந்தியவனுடன் தைவான் நெருக்கம் காட்டுவதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லி, சென்னையை தொடர்ந்து தற்போது மும்பையிலும் தைவான் தூதரக அலுவலகத்தை திறந்துள்ளது.
தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில் இந்தியாவுடனான தொடர்பைத் தைவான் வலுப்படுத்தி வருவது சீனாவுக்கு புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நியாங், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியான தைவானுடன் எந்தவொரு அதிகாரப்பூர்வ தொடர்புகளையும் இந்தியா தவிர்க்க வேண்டும். பீஜிங் உடன் தூதரக உறவு வைத்துள்ள நாடுகள், தைவானுடன் அலுவலக உறவை ஏற்படுத்துவது கூடாது.
சீன-இந்திய உறவுகளை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளில், இவ்விவகாரம் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். லடாக் எல்லையில் சீனா தங்களின் ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S