பெங்களூருவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் போட்டி இறுதிக்கட்டத்தை தொட்டுள்ளது. அக்டோபர் 16ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரிசப் பண்ட் 20 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் பேட்டிங் செய்த நியூசிலாந்து ரச்சின் ரவீந்திரா 134, டேவோன் கான்வே 91 ரன்கள் எடுத்த உதவியுடன் 402 ரன்கள் குவித்தது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பின் களமிறங்கிய இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் பொறுப்புடன் போராடி 462 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 35, ரோகித் சர்மா 52, விராட் கோலி 70, ரிஷப் பண்ட் 99, சர்பராஸ் கான் 150 ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மார்ட் ஹென்றி 3, வில்லியம் ஓரோர்கே 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். இறுதியில் 107 என்ற சுலபமான இலக்கை துரத்தும் நியூசிலாந்து நான்காவது நாள் முடிவில் 0-0 என்ற நிலையில் இருப்பதால் இந்தியா தோல்வி தவிர்க்க போராடுகிறது.
முன்னதாக இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் வேகத்துக்கு சாதகமான ஆடுகளத்தில் மொத்த இந்திய பேட்ஸ்மேன்களும் சொதப்பினர். அதில் டக் அவுட்டான இளம் வீரர் சர்பராஸ் கான் 2வது இன்னிங்ஸில் தம்முடைய தவறை திருத்திக் கொள்ளும் வகையில் அற்புதமாக பேட்டிங் செய்தார். குறிப்பாக விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருடன் அவர் ஜோடி சேர்ந்து 136, 177 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
தொடர்ந்து அசத்திய அவர் தனது முதல் சதத்தை அடித்து குறைந்தபட்சம் இந்தியாவை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றினார் என்றே சொல்லலாம். அந்த வகையில் நன்றாக பேட்டிங் செய்த அவர் 18 பவுண்டரி 3 சிக்சருடன் 150 (195) ரன்கள் குவித்தார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 71 வருடங்கள் கழித்து “ஒரு போட்டியின் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டாகி 2வது இன்னிங்ஸில் 150+ ரன்கள் குவித்த இந்திய வீரர்” என்ற தனித்துவ சாதனையை சர்பராஸ் படைத்துள்ளார்.
வரலாற்றில் முதலும் கடைசியுமாக 1953ஆம் ஆண்டு போர்ட் ஆஃப் ஸ்பெயினில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 0 ரன்னில் அவுட்டான இந்திய வீரர் மாதவ் அப்டே 2வது இன்னிங்ஸில் 163* ரன்கள் குவித்தார். தற்போது 71 வருடங்கள் கழித்து சர்பராஸ் கான் அதே போன்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். மேலும் ஷிகர் தவானுக்கு பின் (2014ஆம் ஆண்டு ஆக்லாந்தில் 0, 114) நியூசிலாந்துக்கு எதிராக ஒரு போட்டியில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டாகி பின்னர் சதமடித்த இந்திய வீரராகவும் சர்பராஸ் சாதனை படைத்துள்ளார்.
முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன?
பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?
பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!