முதல்வர் விஜய்யை சந்தித்த நடிகை சமந்தா!
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்யை நடிகை சமந்தா புதன்கிழமை (ஜூன் 17) நேரில் சந்தித்தார்.இந்த சந்திப்பு குறித்து சமந்தா தனத் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இன்று, நான் சென்னையில் தரையிறங்கியபோது, முதல்வரை சந்திக்கப் போகிறேன் என்ற மகிழ்ச்சியான உணர்வு என்னுள் ஏற்பட்டது. அவர் திரையில் மட்டும் கதாநாயகனாக இருப்பதற்காகப் பிறந்தவர் அல்ல என்று நான் எப்போதுமே உணர்ந்திருக்கிறேன். அவருடைய ஆற்றல், ஆளுமை மற்றும் மக்கள் அவருக்கு அளிக்கும் வரவேற்பு ஆகியவை இதை விடப் பெரிய ஒரு விஷயத்துக்காக பிறந்தவர் என்று எனக்கு தோன்றும்.
ஏற்கெனவே, நாம் வெற்றி பெற்று முத்திரை பதித்த துறையை விட்டுவிட்டு, அதைவிட சவாலான புதியதொரு களத்தில் இறங்குவது சாதாரண காரியமல்ல. அவர் செய்வதற்குக் காரணம் அது எளிமையானது என்பதற்காக அல்ல; மாறாக அவரால் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கையால்தான்.
அனைவருடைய வாழ்விலும் ஏதோ ஒரு கட்டத்தில் தற்போது செய்வதைவிட மேலும் அதிகமாக ஏதேனும் செய்ய வேண்டும் எண்ணம் தோன்றும். மிகச் சிலரே அந்த எண்ணத்துக்கு செவிசாய்க்கின்றனர். முதல்வர் விஜய் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களை அவர் மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவார் என்று எனக்குத் தோன்றுகிறது.
இதை அவர் வகிக்கும் பதிவியால் அல்லாமல், மாறாக அவருடைய அணுகுமுறையால் செய்வார்.அவருக்கு வலிமையும், ஞானமும், தைரியமும் கிடைக்கவும் அவரது பாதையில் உறுதியாக இருக்கவும் வாழ்த்துகிறேன். மேலும், இதைப் பார்க்கும் ஒவ்வொரு இளைஞருக்கும், நீங்கள் தொடங்கிய கனவை விட வாழ்க்கை மிகவும் பெரியது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக அமையும் என்று சமந்தா குறிப்பிட்டுள்ளார்.விஜய் - சிம்ரன் இணைந்து கத்தி, தெறி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்தது குறிப்பிடத்தக்கது.