ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்றது. அத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. இருப்பினும் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் வெற்றி கண்ட நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. அதைத்தொடர்ந்து மாபெரும் இறுதிப்போட்டி அக்டோபர் 20ஆம் தேதி துபாயில் நடைபெற்றது.
அப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 20 ஓவர்களில் போராடி 158-5 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சுசி பேட்ஸ் 32, கேப்டன் சோபி டேவின் 43 (38), ப்ரூக் ஹல்லிடே 38 (28) ரன்கள் எடுத்தனர். தென்னாபிரிக்காவுக்கு அதிகபட்சமாக ம்லபா 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
பின்னர் 159 ரன்களை சேசிங் செய்த கேப்டன் லாரா அதிரடியாக விளையாடி 33 (27) ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்தார். ஆனால் எதிர்ப்புறம் டஸ்மின் பிரிட்ஸ் 17, போஸ் 9, மெரிசன் காப் 8, டீ கிளார்க் 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதே போல லோயர் ஆர்டரில் சோலே ட்ரையான் 14, சுனே லஸ் 9, டெர்க்சன் 10 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
அதனால் 20 ஓவரில் 126-9 ரன்கள் மட்டுமே எடுத்த தென்னாபிரிக்கா பரிதாபமாக தோற்றது. குறிப்பாக ஆடவர் அணியை போலவே அழுத்தமான இறுதிப் போட்டியில் சேசிங் செய்வதில் சொதப்பிய மகளிர் தென்னாப்பிரிக்க அணியும் முதல் கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. 2024 ஆடவர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியிடம் தென்னாபிரிக்கா ஃபைனலில் தோற்றது.
அதனால் ஒரே வருடத்தில் 2 டி20 உலகக் கோப்பை ஃபைனல்களில் தோல்வியை சந்தித்து தென்னாபிரிக்கா நெஞ்சம் உடைந்துள்ளது. மறுபுறம் பேட்டிங் போலவே பந்து வீச்சிலும் அசத்திய நியூசிலாந்து மகளிர் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 2024 மகளிர் டி20 உலகக் கோப்பையை முதல் முறையாக வென்று நியூசிலாந்து சாதனை படைத்தது.
சொல்லப்போனால் ஆடவர் அணியை முந்தி கொண்ட மகளிர் அணி வரலாற்றில் முதல் முறையாக டி20 உலக கோப்பையை வென்று நியூசிலாந்து வரலாற்று சாதனை படைத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ரோஸ்மேரி மேயர் மற்றும் எமிலியா கெர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதனால் நியூசிலாந்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அவர் யார்?
இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!