சென்னையை சேர்ந்த யூடியூபர் இர்பான் - ஆசிபா தம்பதிக்கு, ஜூலை 24-ந்தேதி தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும் போது, அறுவை சிகிச்சை அறையில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை, இர்பான் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ சர்ச்சையான நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனை 10 நாட்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டது. மேலும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
அதேபோல, பிரசவம் பார்த்த டாக்டர் நிவேதிதா மற்றும் இர்பான் மீது நடவடிக்கை எடுக்கும்படி, செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு, மருத்துவ ஊரக நல பணிகள் துறை அதிகாரிகள் புகார் அளித்தனர். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக இர்பானுக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரம் தொடர்பாக வருத்தம் தெரிவித்து மருத்துவத்துறைக்கு இர்பான் கடிதம் அனுப்பியுள்ளார். வெளிநாட்டில் இருப்பதால் உதவியாளர் மூலமாக தனது தரப்பு வருத்தத்தை கடித்ததின் மூலமாக தெரிவித்துள்ளார்.
அதில், எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை என்றும் மருத்துவ சட்டங்களை மதிப்பதாகவும் இர்பான் குறிப்பிட்டுள்ளார்.
மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?
இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!