பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் கத்துக்குட்டியாக கருதப்படும் அமெரிக்கா தோற்கடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. டாலஸ் நகரில் ஜூன் 6ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 159/7 ரன்கள் எடுத்தது. அதைத் துரத்தியா அமெரிக்காவும் 20 ஓவரில் சரியாக 159/3 ரன்கள் எடுத்தது.
அப்படி போட்டி சமனில் முடிந்ததால் வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அதில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா 18/1 ரன்கள் எடுத்தது. ஆனால் அதை துரத்திய பாகிஸ்தான் 13 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியிலேயே வெற்றி கண்டு அமெரிக்கா வரலாறு படைத்தது
மறுபுறம் உறுப்பு நாட்டு அணியிடம் முதல் முறையாக டி20 உலகக் கோப்பையில் தோல்வியை பதிவு செய்து பாகிஸ்தான் அவமானத்தை சந்தித்தது. இந்த தோல்விக்கு பவர் பிளே ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 26/3 என தடுமாறியதே காரணம் என்று கேப்டன் பாபர் அசாம் தெரிவித்தார். அத்துடன் பவர் பிளே மற்றும் மிடில் ஓவர்களில் தங்களுடைய பவுலர்கள் அதிக விக்கெட்டுகள் எடுக்க தவறியதும் தோல்வியை கொடுத்ததாக அவர் வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில் ஓரளவு பேட்டிங்க்கு சாதகமாக மைதானத்தில் 43 பந்துகளில் 44 ரன்கள் எடுத்த பாபர் அசாம் பாகிஸ்தான் அணிக்காக விளையாடவில்லை என்று முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் விமர்சித்துள்ளார். அந்த வகையில் மற்ற வீரர்களை குறை சொல்லாமல் முதலில் கேப்டனாக அசத்த தவறிய பாபர் அசாம் தான் இந்த தோல்விக்கு காரணம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
அதை விட இந்தத் தொடருக்காக 2011 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனை பாகிஸ்தான் வாரியம் ஸ்பெஷல் பயிற்சியாளராக நியமித்தது. ஆனால் தற்போது இந்திய அணியை போல் பாகிஸ்தான் அணி கிடையாது என்பதை கேரி உணர்ந்திருப்பார் என்றும் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “ஓரளவு நியாயமான பேட்டிங்கு சாதகமான சூழ்நிலைகளில் ஒரு கேப்டனாக நீங்கள் 40+ பந்துகளில் 100+ ஸ்டிரைக் ரேட் கொண்ட இன்னிங்ஸை விளையாடியுள்ளீர்கள். இப்படி விளையாடும் நீங்கள் உங்களுடைய அணியின் நன்மைக்காக செயல்படவில்லை. இந்திய கிரிக்கெட்டையும் பாகிஸ்தான் கிரிக்கெட்டையும் கையாள்வதில் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது என்பதை கேரி தற்போது உணர்ந்திருப்பார்” என்று கூறினார்.
அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்?
கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?
தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?
வங்க கடலில் நிலவும் காற்று சுழற்சி: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சவுதி அரேபிய பாலைவனத்தில் முதல் முறையாக பனிப்பொழிவு - வீடியோ
அ.தி.மு.க. வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதி திடீர் விலகல்
பிரதமர் மோடியுடன் எனது முதல் உரையாடல்: டிரம்ப் நெகிழ்ச்சி
வாகை சூடிய டிரம்ப்.. எவ்வளவு வாக்குகள்?.. எங்கெங்கு வெற்றி? - கமலா கைப்பற்றிய மாகாணங்கள் எவை?
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!