Tamil News & POLLING

 

வங்க கடலில் நிலவும் காற்று சுழற்சி: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

1 year ago 08 நவம்பர் 2024 01:20 AM 154 views
சென்னை: தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களிலும், 13-ம் தேதி வரை ஒருசில இடங்களிலும் லேசா
னது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.






தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 9, 10 தேதிகளில் டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவ.11-ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும், 12-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும், 13-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.






சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

உங்கள் கருத்து (Your Opinion)

இந்த செய்தியை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK ANNAMALAI தவெக AIADMK ADMK AMMK டிடிவி தினகரன் MK STALIN TTV DHINAKARAN TAMIL NADU எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS உதயநிதி ஸ்டாலின் முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் சீமான் பாராளுமன்ற தேர்தல் தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி தமிழகம் ரஜினிகாந்த் PMK கனமழை காங்கிரஸ் UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM பாமக பிரதமர் மோடி கைது அன்புமணி ராமதாஸ் PARLIAMENT ELECTION CONGRESS KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை கொலை அமமுக NELLAI EDAPPADI PALANISWAMI SEEMAN COIMBATORE மதுரை தமிழ்நாடு TAMILAGA VETTRI KAZHAGAM கள்ளக்காதல் கோவை திருநெல்வேலி ELECTION COMMISSION தென்காசி OPS சட்டசபை தேர்தல் THOOTHUKUDI TAMIL ACTRESS கீர்த்தி சுரேஷ் ஓபிஎஸ் திருப்பரங்குன்றம் நாம் தமிழர் கட்சி THIRUMAVALAVAN டாப் நியூஸ் நயினார் நாகேந்திரன் திருமாவளவன் டிரெண்டிங் நெல்லை TAMIL CINEMA தீபாவளி NORTHEAST MONSOON MADURAI விடுமுறை தேவர் AJITH வன்னியர் பாலியல் தொல்லை தமிழக அரசு கொரோனா