Tamil News & POLLING

 

காற்று மாசு எதிரொலி: வீட்டில் இருந்தே வேலை திட்டத்தை அறிமுகப்படுத்த டெல்லி அரசு முடிவு

1 year ago
19 நவம்பர் 2024 10:10 AM | views : 140
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று 7-வது நாளாக காற்றின் மாசு அபாய கட்டத்தை எட்டி உள்ளது.

டெல்லி, நொய்டா, காசியாபாத், குருகிராம் ஆகிய நகரங்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு காற்றின் தரக்குறியீடு 500-ஐ தாண்டி விட்டது.

காற்று மாசு கடுமையாக உள்ளதால் டெல்லியில் அடர்ந்த புகை மூட்டம் நிலவுகிறது. பனிப்பொழிவும் அதிகமாக இருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசுவினால் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டால் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் மாஸ்க் அணிய தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில், காற்று மாசு அதிகரிப்பின் எதிரொலியாக வீட்டில் இருந்தே வேலை செய்யும் திட்டத்தை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளோம் என சுற்றுச்சூழல் துறை மந்திரி கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒற்றைப்படை, இரட்டைப்படை எண்கள் கொண்ட வாகனங்கள் இயக்கும் திட்டமும் விரைவில் நடைமுறைக்கு கொண்டு வருகிறோம் என தெரிவித்தார்.

உங்கள் கருத்து (Your Opinion)

இந்த செய்தியை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK ANNAMALAI தவெக ADMK AIADMK AMMK TTV DHINAKARAN TAMIL NADU டிடிவி தினகரன் MK STALIN எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS உதயநிதி ஸ்டாலின் சீமான் முக ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் தமிழகம் தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி PMK ரஜினிகாந்த் கனமழை UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM காங்கிரஸ் பாமக CONGRESS பிரதமர் மோடி கைது PARLIAMENT ELECTION அன்புமணி ராமதாஸ் KEERTHY SURESH SEEMAN EDAPPADI PALANISWAMI அமமுக NELLAI கொலை வடகிழக்கு பருவமழை மதுரை ELECTION COMMISSION TAMIL ACTRESS TAMILAGA VETTRI KAZHAGAM தென்காசி திருநெல்வேலி சட்டசபை தேர்தல் கள்ளக்காதல் கோவை COIMBATORE THOOTHUKUDI தமிழ்நாடு OPS AJITH கீர்த்தி சுரேஷ் தீபாவளி MADURAI டாப் நியூஸ் பாலியல் தொல்லை டிரெண்டிங் நெல்லை TAMIL CINEMA THIRUMAVALAVAN தேவர் NORTHEAST MONSOON ஓபிஎஸ் நயினார் நாகேந்திரன் கொரோனா நாம் தமிழர் கட்சி விடுமுறை தமிழக அரசு திருமாவளவன் வன்னியர் திருப்பரங்குன்றம்