பிக்பாஸ்8 நிகழ்ச்சியில் அடுத்த வைல்ட் கார்டு எண்ட்ரி பற்றிய தகவல் கசிந்துள்ளது.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஏழு சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். சினிமா, அரசியல் என்று அடுத்தடுத்து நேரமில்லாததால் அவர் நிகழ்ச்சியில் இருந்து ஒதுங்கி விட இந்த சீசனை நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த சீசனின் போட்டியாளர்களும் தொகுப்பாளரும் மந்தமாக இருப்பதாகவே பிக்பாஸ் ரசிகர்கள் பலரும் சொல்லி வருகின்றனர். இதுமட்டுமல்லாது, நேற்றைய சீசனில் பிக்பாஸூமே போட்டியாளர்களிடம் நீங்கள் இன்னும் இந்த வீட்டில் வாழ ஆரம்பிக்கவில்லை எனக் கூறினார்.
நிகழ்ச்சியை சூடுபிடிக்க வைக்க எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு முதல் முறையாக 6 வைல்ட் கார்டு போட்டியாளர்களை பிக்பாஸ் உள்ளே அனுப்பினார். ஆனாலும், அவர்களும் நிகழ்ச்சியில் பெரிதாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால், அடுத்த வைல்ட் கார்டு போட்டியாளரை பிக்பாஸ் உள்ளே அனுப்ப முடிவு செய்திருக்கிறார்.
அந்த வகையில் நிகழ்ச்சியில் ஏற்கனவே வெளியேறிய போட்டியளார்களே மீண்டும் வைல்ட் கார்டு எண்ட்ரியில் உள்ளே வர இருக்கிறார்கள். நிகழ்ச்சியின் ஐம்பதாவது நாளில் ரவீந்தர், தர்ஷா குப்தா, அர்னவ் ஆகியோரில் ஒருவர் உள்ளே வர வாய்ப்பிருப்பதாகத் தகவல் கசிந்துள்ளது.
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒருவன் நடப்பான் ஒருவன் ஓடுவான் அது என்ன?
போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை
ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!
கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்
யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை
கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!