ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழ்நாட்டின் 26வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றார்
தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பு வகித்து வந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி என்பவரை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த 9-ந் தேதி உத்தரவிட்டார்.
நாகலாந்து மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பு வகித்த வந்த ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து அவரது பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் 18-ந் தேதி காலை 10.30 மணியளவில் ஆர்.என்.ரவியின் பதவியேற்பு விழா நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின். மூத்த அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் 10.22க்கு ஆளுநர் மாளிகைக்கு வந்தனர். இந்த விழாவில் பங்கேற்பதற்காக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது கட்சியின் மூத்த உறுப்பினர்களான கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், எஸ்.பி.வேலுமணி உள்பட பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு 8வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.
புதிய ஆளுநராக பொறுப்பேற்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு காவல்துறையினர் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், பதவியேற்பு விழா மேடையில் ஆர்.என்.ரவி, ஆர்.என். ரவியின் மனைவி லட்சுமி ரவி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆகியோர்கள் இருந்தனர். அவர்களுடன் பாதுகாப்பு அதிகாரிகளும், அதிகாரிகளும் இருந்தனர்.
பின்னர், சரியாக 10.40 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி புதிய ஆளுநராக ஆர்.என்.ரவிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, தமிழ்நாட்டின் 26வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்றுக் கொண்ட பிறகு, ஆர்.என்.ரவிக்கும், அவரது மனைவிக்கும் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் பூங்கொத்து அளித்தும், முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தகங்கள் அளித்தும் வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்த விழா, தேசிய கீதத்துடன் 10.45 மணிக்கு நிறைவு பெற்றது. சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் வரையில் மட்டுமே இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக இந்த விழாவில் அனைவரும் முகக்கவசம் அணிந்தே பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாட்டின் அமைச்சர்களும், தமிழக எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க. எம்.பி.க்கள், தமிழ்நாடு சட்டமன்ற கட்சி குழுக்களின் தலைவர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். எட்டாவது வரிசையில் அமர்ந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அருகில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அமர்ந்திருந்தார். ஆளுநர் பதவியேற்பு விழா நிறைவு பெற்றுள்ள நிலையில், இன்று மாலை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நடைபெற உள்ளது. இந்த விழாவில், ஆளுநருடன் முதல்வர், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.
முன்னதாக, தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்றுள்ள ஆர்.என்.ரவி நேற்று தமிழ்நாடு வந்தார். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமை செயலாளர் வெ.இறையன்பு ஆகியோர் வரவேற்றனர். மேலும், ஆர்.என்.ரவியை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
ரவீந்திர நாராயணன் ரவி என்ற ஆர்.என்.ரவி பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவைச் சேர்ந்தவர். இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள ஆர்.என்.ரவி, ஐ.பி.எஸ். அதிகாரியாக பொறுப்பு வகித்தவர். மத்திய அரசின் உளவுத்துறையில் பணியாற்றியபோது, வடகிழக்கு பகுதிகளில் பெருமளவில் காணப்பட்ட வன்முறைக்கு எதிராக முக்கிய பங்காற்றியவர் இவர், 2012ம் ஆண்டு ஐ.பி.எஸ். பணியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர், பிரதமர் அலுவலகத்தின் இணை புலனாய்வு குழு தலைவராக செயல்பட்டார். 2018ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
பின்னர், வடகிழக்கு மாநிலங்களில் பணியாற்றிய அனுபவம் நிரம்ப பெற்ற காரணத்தால் அவரை 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ந் தேதி நாகலாந்து மாநில ஆளுநராக குடியரசுத் தலைவர் நியமித்து உத்தரவிட்டார். தற்போது, அவர் தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பு ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, உளவுத்துறையில் பணியாற்றி ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவரை, தமிழ்நாட்டின் ஆளுநராக நியமித்ததற்கு பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனங்களும் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?
ஒரு கூடையில் ஆறு ஆப்பிள் இருந்தன. அங்கு இருந்த 6 சிறுவர்களுக்கும் 6 பழங்கள் கொடுத்துவிட்டனர். ஆனால் கூடையில் ஒரு பழம் இருந்தது அது எப்படி?
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கடந்த 28-6-2025 அன்று வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், திருப்புவனம் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். விசாரணையின் போது காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் அவரது மரணத்துக்குக் காரணம் என்பதை அறிந்ததும் நான் மிகவும் வேதனையடைந்தேன். இது யாராலும் நியாயப்படுத்தப்பட
2-வது டெஸ்ட்: ஆகாஷ் தீப் அபார பந்துவீச்சு... இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
Fact Check : அண்ணாமலை உடன் இருப்பது நிகிதா இல்லை... அவர் யார் தெரியுமா?
திருப்புவனம் அஜித் குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு
போதைப் பொருள் பயன்பாடு- நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவப் பரிசோதனை
போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!