சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இதனிடையே, பிரபல மலையாள நடிகர் திலீப் நேற்று சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு விஐபி தரிசனம் வழங்கப்பட்டதாக கேரள நாளிதழில் இன்று செய்தி வெளியானது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு காத்திருந்தபோது நடிகர் திலீப்பிற்கு விஐபி தரிசனம் வழங்கப்பட்டதாகவும், அவர் தரிசனத்திற்கான முன்வரிசையில் மாலை கோவில் நடை அடைக்கும்வரை நின்றுள்ளார். இதனால், பிற பக்தர்கள் பல மணிநேரம் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததாகவும், அவர்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளானதாகவும் செய்தி வெளியானது.
இந்த செய்தியை அடிப்படையாக கொண்டு கேரள ஐகோர்ட்டு இன்று தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, நடிகர் திலீப்பிற்கு சபரிமலை கோவிலில் எந்த அடிப்படையில் விஐபி தரிசன வசதி வழங்கப்பட்டது என்று கோர்ட்டு கேள்வி எழுப்பியது. மேலும், நடிகர் திலீப்பிற்கு விஐபி தரிசனம் வழங்கியதற்கு சபரிமலை தேவசம் போர்டு மற்றும் போலீசாருக்கு ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, நடிகர் திலீப்பிற்கு சபரிமலை கோவிலில் விஐபி தரிசனம் வழங்கப்பட்டது தொடர்பாக விரிவான அறிக்கை சமர்ப்பிக்க போலீசாருக்கு உத்தரவிட்ட ஐகோர்ட்டு, கோவிலின் சிசிடிவி காட்சிகளை நாளைக்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.
வாள் இல்லாமல் கேடயம் மட்டும் எப்போதும் வைத்திருக்கும், போருக்கு போகாத வீரன் அவன் யார்?
முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன?
காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?
கனமழை எதிரொலி : திருநெல்வேலி, தூடித்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு விடுமுறை
தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: தமிழக அரசு
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக PoK மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!