திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே, வீட்டில் பெண் மர்மமாக உயிரிழந்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அடித்து துன்புறுத்தி கழுத்தை நெரித்து வலுக்கட்டாயமாக உடலுறவில் ஈடுபட்டதால் உயிரிழந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சந்திரபுரம் பொன்னன் வட்டம் பகுதியைச் சேர்ந்த சிவா, தனது மனைவி சந்தியாவை தனியாக வீட்டில் விட்டுவிட்டு பெங்களூருக்கு வேலைக்கு சென்றுள்ளார். கடந்த 11ம் தேதி, சந்தியா சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து, அவரது உடலை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சந்தியாவின் தொலைபேசியை ஆராய்ந்து, அதன்பேரில் விக்னேஷ் மற்றும் குமரேசனிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
குமரேசனும், சந்தியாவும் கடந்த 7 ஆண்டுகளாக தகாத உறவில் இருந்ததும், குமரேசன் சிங்கப்பூர் சென்ற நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவருடன் சந்தியா தகாத உறவில் இருந்ததும் தெரியவந்தது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குமரேசன் சொந்த ஊர் திரும்பிய நிலையில், விக்னேஷ் உடனான தகாத உறவு பற்றி அறிந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த 10ம் தேதி இரவு, வீட்டில் தனியாக இருந்த சந்தியாவை கழுத்தை நெரித்து குமரேசன் வலுக்கட்டாயமாக உடலுறவில் ஈடுபட்டதால் சந்தியா மயக்கமடைந்த நிலையில் குமரேசன் அங்கிருந்து தப்பியுள்ளார். பின்னர் அங்கு வந்த விக்னேஷ், சந்தியாவை அடித்து துன்புறுத்தி மயக்க நிலையில் உடலுறவில் ஈடுபட்டதால் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, விக்னேஷ் மற்றும் குமரேசனை போலீசார் கைது செய்து திருப்பத்தூர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?
பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல அது என்ன ?
எதற்காக டெல்லி பயணம்?- செங்கோட்டையன் பதில்
இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைபட்சமான பேரழிவு; டொனால்டு டிரம்ப்
விழாக்கோலம் பூண்ட நாகை: வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
காலாண்டு தேர்வு தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை
கூலி - திரை விமர்சனம்!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!