சென்னை,
வன்னியர்களுக்கு உள்இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், வட்டத் தலைநகரங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் இன்று (24-ம் தேதி) மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தார்.
அதன்படி, வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசைக் கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே பாமக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தால் விழுப்புரம் - சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். தமிழக அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதைபோல சென்னை, கடலூர் உள்ளிட்ட இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், "வன்னியர் உள்ஒதுக்கீடு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தெளிவான உத்தரவை வழங்கியுள்ளது. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ஏற்கனவே உறுதியளித்தார். அதிகாரம் இருந்தும் கொடுக்க மனம் இல்லாத திராவிட மாடல் திமுக அரசு. வன்னியர்களின் சமூக பின்தங்கிய நிலை குறித்த தரவுகளை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு தான் நடத்த வேண்டும் என முதல்வர் தற்போது சொல்கிறார்" என்று கூறினார்.
#JUSTIN || காஞ்சிபுரத்தில் கூடிய கூட்டம்.. கொந்தளித்த அன்புமணி - குவிக்கப்பட்ட போலீசார்#kanchipuram #pmk #anbumaniramadoss #ramadoss #protest #thanthitv pic.twitter.com/5RjUu8kSmT
— Thanthi TV (@ThanthiTV) December 24, 2024
உங்களுக்கு சொந்தமானத ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்?
இலையுண்டு கிளையில்லை,பூ உண்டு மணமில்லை,காய் உண்டு விதையில்லை,பட்டை உண்டு கட்டை இல்லை,கன்று உண்டு பசு இல்லை அது என்ன?
ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம் – அவன் யார்?
சென்னை: தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு தவிர்க்க முடியாததாக உள்ளது. ஆனால் சுற்றுச்சூழல் மாசு, ஒலி மாசு உள்ளிட்ட பலவற்றை அதிக சத்தம், அதிக மருந்துகள் கொண்ட பட்டாசுகள் ஏற்படுத்தி வருகின்றன. சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பட்டாசுகள் வெடிக்க தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த
தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: தமிழக அரசு
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக PoK மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம்
அமித்ஷாவுடன் சந்திப்பு: கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொண்டு வெளியேறிய இ.பி.எஸ்.
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!