POLLING FLAMES

 

பான் கார்டுக்கு விண்ணப்பிக்க இனி ஆதார் மட்டும் போதாது - மத்திய அரசு அதிரடி

1 month ago 19 மார்ச் 2026 02:05 AM | views : 163
பான் கார்டு வருமான வரித்துறையால் வழங்கப்படும் முக்கிய அடையாள ஆவணமாகும். நிதி பரிவர்த்தனைகள், வருமான வரி செலுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு பான் கார்டு கட்டாயமாகும். 10 இலக்கங்கள் கொண்ட இந்த பான் கார்டை வருமான வரித்துறையின் கீழ் செயல்படும் இணையதளத்தில் விண்ணப்பித்து பெற முடியும். தற்போது வரை ஆதார் கார்டு மட்டும் இருந்தால் போதும். அதை வைத்து உடனடியாக பான் எண் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், இந்த விதிகளில் வரும் 1ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி பான் கார்டு விண்ணப்பத்தின் போது பிறந்த தேதியை உறுதி செய்ய ஆவணமும் சமர்ப்பிக்க வேண்டும்.

இது தொடர்பாக மத்திய அரசின் பொது சேவை அமைப்பு கூறியிருப்பதாவது: “பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய நடைமுறையின்படி ஆதார் அட்டையுடன் பிறந்த தேதியை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு ஆதார் மட்டுமே போதுமானது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறப்பு சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பத்தாம் வகுப்பு கல்வி சான்றிதழ் உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை பிறந்த தேதிக்கான ஆவணமாக சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK MK STALIN தவெக எடப்பாடி பழனிசாமி பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் TAMIL NADU ANBUMANI RAMADOSS AIADMK PMK தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் கனமழை ரஜினிகாந்த் முக ஸ்டாலின் பாமக தமிழகம் PARLIAMENT ELECTION இந்திய அணி கோவை UDHAYANIDHI STALIN CONGRESS திருமாவளவன் கொலை COIMBATORE EDAPPADI PALANISWAMI அன்புமணி ராமதாஸ் AJITH INDIAN CRICKET TEAM OPS KEERTHY SURESH தமிழ்நாடு சீமான் அமமுக கைது TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி BIGG BOSS TAMIL தமிழக சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் நெல்லை கொரோனா TAMIL ACTRESS NELLAI சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN தீபாவளி விடுமுறை தென்காசி கள்ளக்காதல் தேவர் ELECTION COMMISSION தூத்துக்குடி மதுரை வடகிழக்கு பருவமழை CSK 2024 T20 WORLDCUP கீர்த்தி சுரேஷ் RAJINIKANTH SURIYA அஜித் சூர்யா வன்னியர் திருப்பரங்குன்றம்