இயக்குநர் நவீன் குமார் இயக்கத்தில் ராதா ரவி, வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் 'கடைசி தோட்டா'. மர்டர் மிஸ்ட்ரி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் வனிதா விஜயகுமார் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. சர்ச்சையாகி இருக்கும் நிலையில், இதுகுறித்து பேசிய ஷகிலா, விஜய்யை திட்டியது போல வனிதாவையும் மக்கள் திட்டட்டும் நீங்கள் திட்ட திட்டத்தான் நாங்கள் வளர்வோம் என்றார்.
கடைசி தோட்டா படம் பார்த்த ஷகிலா, கடைசி தோட்டா படம் நல்ல படம் என்ன பொருத்தவரை முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் விறுவிறுப்பாக செல்கிறது. எல்லாரும் இந்த படத்தை தியேட்டருக்கு போய் பாருங்க. இதுபோன்ற சிறிய பட்ஜெட் படங்களை நாம் வரவேற்றாள் தான் சின்ன படங்கள் வெளியே வரும். ரஜினி, கமல், விஜய், தனுஷ் போன்ற பெரிய நடிகர்களுடைய படத்தை எத்தனை நாளைக்குத்தான் நாம பாத்துட்டு இருக்கோம். சின்ன நடிகர்களும் சிறு பட்ஜெட் படங்களுக்கும் வாய்ப்பு கொடுக்கும்போது தான் புது முக நடிகர்களும் நடிக்க வருவாங்க.
திறமையான எத்தனையோ நடிகர்கள் இருக்கிறார்கள். நல்லா இயக்குனர்களும் இருக்காங்க அந்த மாதிரி புதுசா வர்றவங்களுக்கு இந்த தமிழ் சினிமா ஒரு நல்ல அங்கீகாரத்தை கொடுக்கணும். பெரிய நடிகர்கள் படம் வரும் போது சிறிய பட்ஜெட் படங்களும் தைரியமாக வெளிவர வேண்டும். அந்த பெரிய நடிகரின் படம் வருகிறதே என்று பயப்படக்கூடாது. பெரிய பெரிய மால்களிலும் சிறிய பட்ஜெட் படத்தை திரையிட வேண்டும் என்றார்.
நடிகர் விஜய் சிகரெட் பிடிப்பது போல காட்சி வந்ததற்கு பலரும் அவரை மோசமாக விமர்சனம் செய்தனர். இந்த படத்தில் வனிதா விஜயகுமார் சிகரெட் பிடிக்கிறார். தமிழ் நாட்டில் பிறந்த ஒரு குடும்ப பெண் இப்படி சிக்ரெட் பிடிக்கலாமா என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த நடிகை சகிலா, அப்போ நீங்கள் வனிதா விஜயகுமாரை தெய்வமாக, குடும்பப் பெண்ணா? தமிழ்நாட்டுப் பெண்ணாக பார்க்கிறீர்களா? வனிதா விஜயகுமார் அவர்கள் பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் படத்திற்காக இப்படி நடித்திருக்கிறார்கள் இதில் என்ன தவறு. விஜய்யை திட்டியது போல, வனிதாவையும் திட்டுவார்கள், மக்கள் திட்டத்திட்டத்தான் நாங்க நன்றாக வளர்வோம் என்று பேசி இருந்தார் நடிகை ஷகிலா.
எம் எல் ஏ ஒருவரின் வீட்டில் ஐடி ரெய்டு நடக்கப்போவதாக அந்த எம் எல் ஏ-வுக்கு தகவல் கிடைக்க, வீட்டில் இருந்த கருப்பு பணம் அனைத்தையும் மூட்டை மூட்டையாக கட்டி கொண்டு, அவரது ரெசார்ட் ஒன்றில் வைத்து விடுகிறார். இந்த நேரத்தில் தான் அதே நாளில் ரெசார்டிற்கு சிலர் ரூம் எடுத்து தங்க வருகின்றனர். இந்த நேரத்தில், அந்த ஓட்டல் அறையில் மர்மமான முறையில் பெண் கொல்லப்படுகிறாள். அந்த பெண்ணை கொன்றது யார்.. கொலையாளி யார்? கொலையாளியை வனிதா கண்டுபிடித்தாரா இல்லையா? என்பது தான் கடைசி தோட்ட திரைப்படத்தின் கதை. இத்திரைப்படத்திற்கு மக்களிடம் இருந்து நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது.
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
ஓடெடுப்பான் பிச்சை ஒரு நாளும் கண்டறியான் காடுறைவான் தீர்த்தக் கரைசேர்வான்- தேட நடக்குங்கால் நாலுண்டு நல்தலை ஒன்றுண்டு! படுக்கும்போது அவையில்லை பார்! அது என்ன?
தன் மேனி முழுவதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை
ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!
கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்
யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை
கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!