நேற்று நடந்த ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் யார் என்றால் அது பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்.
இறுதி வரையில் ஆட்டமிழக்காமல் இருந்ததுடன்,கடைசி 20 வது ஓவர் வரையிலும் கூட,எங்கே பஞ்சாப் வென்று விடுமோ என்ற பதட்டத்தை RCB அணிக்கும், ஒருவேளை நாம் வென்று விடுவோமோ என்ற நம்பிக்கையை தான் சார்ந்த பஞ்சாப் அணிக்கும் இறுதி ஓவரின் இறுதி பந்து வரையிலும் தந்து கொண்டே இருந்தார்.
அப்படியான பஞ்சாப் அணியின் ஆகச் சிறந்த நம்பிக்கை கீற்றாக இருக்கும் ஷஷாங்க் சிங் பஞ்சாப் அணிக்குள் தவறுதலாக இடம் பெற்ற வீரர் என்பது தெரியுமா?
2024 ல் ஐபிஎல் அணிகளுக்கான ஏலத்தில் சஷாங் சிங் என்ற பெயரில் இரு வீரர்கள் இருந்தார்கள்.ஒருவர் 19 வயதான இளம் வீரர்.இன்னொருவர் 32 வயதானவர்.இரு வீரர்களுக்குமே இருபது லட்சம் என்ற குறைந்தபட்ச ஏலத் தொகையைத் தான் ஐபிஎல் நிர்வாகம் நிர்ணயம் செய்திருந்தது.
இதில் பஞ்சாப் அணி நிர்வாகம் அந்த 19 வயது ஷஷாங்க் சிங்கை ஏலத்தில் எடுப்பதாக நினைத்துக் கொண்டு 32 வயதான சஷாங்கை ஏலத்தில் எடுத்து விட்டது.தொடர்ந்து ஏலம் நடக்கையில் தான் பஞ்சாப் அணி தாங்கள் எடுத்த சஷாங் தாங்கள் எடுக்க நினைத்த ஷஷாங்க் சிங் அல்ல என்பதை உணர்ந்தது.ஆனால் அதற்குள் ஏல விதிமுறைகள் படி காலம் கடந்து விட, பஞ்சாப் அணியின் உரிமையாளரான பிரீத்தி ஜிந்தா,
“நாங்கள் ஏலத்தில் எடுத்த ஷஷாங்க் சிங் வீரரை வைத்துக் கொள்கிறோம்…” என்று அறிவித்தார்.
அந்தத் தவறு,பஞ்சாப் அணிக்கு ஒரு தலை சிறந்த வீரரையும்,இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடுவதைத் தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட ஷஷாங்க் சிங்கிற்கு புதிய வாய்ப்பையும் ஒரே நேரத்தில் திறந்து விட்டது.
அப்படி பஞ்சாப் அணிக்குள் வந்த ஷஷாங்க் சிங் தான் தனக்குக் கிடைத்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தன் திறனை செயலில் காட்டி,பஞ்சாப் அணியின் முன்னணி வீரராக, நம்பிக்கை நட்சத்திரமாக மாறிப் போனார்….
இயற்கை மிக புதிரானது. நாம் சந்திக்கும் மனிதர்கள்,நம்மை சந்திக்கும் மனிதர்கள், சூழ்நிலைகள்…என சகலத்திலும் நமக்காக ஏதோ ஒன்றை ஒளித்து வைத்திருக்கும்.அதை மட்டும் நாம் கண்டுபிடிக்க வேண்டும்.அது நடந்தால் மற்ற அதிசயங்கள் தானாகவே நடக்கும்…..
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. அது என்ன?
எதற்காக டெல்லி பயணம்?- செங்கோட்டையன் பதில்
இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைபட்சமான பேரழிவு; டொனால்டு டிரம்ப்
விழாக்கோலம் பூண்ட நாகை: வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
காலாண்டு தேர்வு தேதியை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை
கூலி - திரை விமர்சனம்!
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!