POLLING FLAMES

 

23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

6 months ago 24 அக்டோபர் 2025 05:12 AM | views : 267
வங்கக் கடலில் சமீபத்தில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. மேலும் தாழ்வு மண்டலமாகவோ, புயலாகவோ வலுவடையும் என சொல்லப்பட்டது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் அதற்கான அமைப்பு அப்படியே மாறியது.

இதனால் எதிர்பார்த்த மழையும் கிடைக்கவில்லை. வலுப்பெற இருந்த அமைப்பும் வலு குறைந்து காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக தற்போது நிலவி வருகிறது. இந்த நிலையில் தற்போது வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (வெள்ளிக்கிழமை) உருவாக இருக்கிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK MK STALIN எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் TAMIL NADU டிடிவி தினகரன் TTV DHINAKARAN AIADMK ரஜினிகாந்த் ANBUMANI RAMADOSS கனமழை பாராளுமன்ற தேர்தல் இந்திய அணி PMK காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN முக ஸ்டாலின் பாமக தமிழகம் கோவை CONGRESS EDAPPADI PALANISWAMI AJITH PARLIAMENT ELECTION COIMBATORE திருமாவளவன் INDIAN CRICKET TEAM கொலை அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM கைது அமமுக KEERTHY SURESH OPS தமிழ்நாடு NELLAI சட்டசபை தேர்தல் RAJINIKANTH நெல்லை கொரோனா தமிழக சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் வடகிழக்கு பருவமழை TAMIL ACTRESS THIRUMAVALAVAN தேவர் BIGG BOSS TAMIL தென்காசி சூர்யா அஜித் விடுமுறை கள்ளக்காதல் தீபாவளி திருப்பரங்குன்றம் மதுரை ELECTION COMMISSION CSK தூத்துக்குடி SURIYA கீர்த்தி சுரேஷ் வன்னியர்