POLLING FLAMES

 

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை - அன்புமணி கண்டனம்

1 month ago 20 மார்ச் 2026 05:00 AM | views : 207
சென்னை,

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தை அடுத்த வேடநத்தத்தில் 12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ஒரு கொடூரனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை நிம்மதியை அளிப்பதற்கு பதிலாக தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக அடுக்கடுக்கான வினாக்களைத் தான் எழுப்பியிருக்கிறது.

வேடநத்தம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட கொடூரம் நிகழ்ந்து 9 நாள்கள் வரை அந்த வழக்கில் எந்த துப்பும் துலங்காத நிலையில், தர்ம முனீஸ்வரன் என்ற கொடிய பின்னணி கொண்ட குற்றவாளியை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். தர்ம முனீஸ்வரன் ஏற்கனவே இரு வெவ்வேறு நிகழ்வுகளில் மூதாட்டிகளை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்தவன் என்றும், அவர்களிடம் நகைகளை கொள்ளையடித்தவன் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குற்றம் நடந்து 9 நாள்களுக்குப் பிறகு குற்றவாளியை கைது செய்த காவல்துறையினர் மேற்கொண்ட முயற்சிகள் கடுமையானவை, அதிக அர்ப்பணிப்புத் தன்மை கொண்டவை என்றாலும் கூட காவல்துறையின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் பாராட்டத் தக்கவையாக இல்லை. மாறாக, இத்தகைய குற்றங்கள் நடப்பதற்கு வழிவகுத்துக் கொடுப்பவையாகவே உள்ளன.

மூதாட்டியை படுகொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த தர்ம முனீஸ்வரன் பிணையில் வெளிவந்திருந்ததாகவும், தினமும் தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. தர்ம முனீஸ்வரன் போன்ற கொடிய குற்றவாளிகள் பிணையில் விடுவிக்கப்படும்போது, அவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை ஆகும். ஆனால், தூத்துக்குடி காவல்துறை இந்த விஷயத்தில் கோட்டை விட்டுவிட்டது.

அதுமட்டுமின்றி, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தர்ம முனீஸ்வரன் திருடப்பட்ட இருசக்கர ஊர்தியில் தான் அப்பகுதியில் வலம் வந்ததாகவும், அதை வைத்து தான் அவனை கைது செய்ததாகவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது. பல நாள்களாகவே திருடப்பட்ட இருசக்கர ஊர்தியை தர்ம முனீஸ்வரன் பயன்படுத்தி வந்துள்ள நிலையில், அதைக் கண்டுபிடித்திருந்தால் கூட அவனால் மாணவி சீரழிக்கப்பட்டதை தடுத்திருக்க முடியும். ஆனால், அந்த வகையிலும் தமிழ்நாடு காவல்துறை படுதோல்வி அடைந்து விட்டது.

Also Readநடத்தையில் சந்தேகப்பட்டு துன்புறுத்திய கணவன்... தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற பெண்வேடநத்தம் மாணவி விவகாரத்தில் மட்டுமின்றி, கோவை விமான நிலையத்தின் பின்புறம் கல்லூரி மாணவி ஒருவர் கடந்த நவம்பர் மாதம் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட கருப்பசாமி, காளீஸ்வரன், குணா ஆகிய மூவரும் இதேபோன்று கொடூரமான பின்னணி கொண்டவர்கள்தான். பல்வேறு கொலை, கொள்ளை, திருட்டு வழக்குகளில் தொடர்புடைய அவர்கள், திருட்டு வழக்கில் பிணையில் வெளிவந்தபோது தான் கோவை மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த நிகழ்விலும் பழைய குற்றவாளிகளை காவல்துறையினர் கண்காணித்திருந்தால் கூட்டுப் பாலியல் வன்கொடுமையைத் தடுத்திருக்க முடியும். ஆனால், வழக்கம் போலவே இதிலும் காவல்துறைக்கு தோல்விதான்.

சென்னையை அடுத்த மதுராந்தகம் அருகே கடந்த 9-ம் தேதி 14 வயது சிறுமி இரு மனித மிருகங்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். அவ்வழக்கில் கைதான காக்கா பாலாஜி என்பவன் கொடூர பின்னணி கொண்டவன் என்பதும், அவன் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. காக்கா பாலாஜியையும் கண்காணிப்பு வளையத்தில் வைத்திருந்தால் மாணவிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்திருக்காது. அதைத் தடுக்கத் தவறியதும் காவல்துறை தோல்விதான்.

தமிழ்நாட்டை உலுக்கிய இந்தக் கொடிய நிகழ்வுகளையும், அந்த வழக்குகளில் காவல்துறை காட்டிய அலட்சியத்தையும் வைத்துப் பார்க்கும்போது ஒரு விஷயம் தெளிவாகிறது. மன்னிக்கவே முடியாத குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அனைவரும் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரமாக சுற்றி வருகின்றனர். அவர்களை கண்காணிக்கவோ, அவர்கள் மீண்டும், மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கவோ காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, சுதந்திரமாக நடமாட வேண்டிய பெண்களும், குழந்தைகளும்தான் சுதந்திர நாட்டில் தங்களுக்கு என்ன ஆகுமோ? என்ற அச்சத்தில் வாழ வேண்டியுள்ளது.

நாட்டுக்கும், காட்டுக்குமான அடிப்படை வித்தியாசம் என்னவென்றால், நாட்டில் விலங்குகள் கட்டிப் போடப்பட்டிருக்கும்; மனிதர்கள் சுதந்திரமாக நடமாடுவர், காட்டில் விலங்குகள் சுதந்திரமாக நடைபோடும்; மனிதர்கள் அஞ்சி அஞ்சி நடமாடுவர் என்பதுதான். திமுக ஆட்சியில் மனித மிருகங்கள் சுதந்திரமாக நடமாடும்போது, மக்கள், குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் அஞ்சி நடமாட வேண்டியிருந்தால், இது நாடா அல்லது காடா?

"பேய் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்" என்று பாரதியார் கூறியதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகத்தான் தமிழ்நாட்டின் சட்டம் & ஒழுங்கு சூழல் சந்தி சிரிக்கிறது. தமிழ்நாட்டின் சாபக்கேடு என்றால் அது தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சிதான். எத்தகைய சாபமாக இருந்தாலும் அதற்கு ஒரு விமோசனம் இருக்கும். அதேபோல், தமிழ்நாட்டிற்கான சாபவிமோசனம் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல்தான். அந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி & அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு மக்கள் வாக்களிப்பதன் மூலம் தமிழ்நாட்டுக்கு சாப விமோசனம் கிடைக்கும். அப்போது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK MK STALIN எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் TAMIL NADU டிடிவி தினகரன் TTV DHINAKARAN AIADMK ரஜினிகாந்த் ANBUMANI RAMADOSS கனமழை பாராளுமன்ற தேர்தல் இந்திய அணி PMK காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN முக ஸ்டாலின் பாமக தமிழகம் கோவை CONGRESS EDAPPADI PALANISWAMI AJITH PARLIAMENT ELECTION COIMBATORE திருமாவளவன் INDIAN CRICKET TEAM கொலை அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM கைது அமமுக KEERTHY SURESH OPS தமிழ்நாடு NELLAI சட்டசபை தேர்தல் RAJINIKANTH நெல்லை கொரோனா தமிழக சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் வடகிழக்கு பருவமழை TAMIL ACTRESS THIRUMAVALAVAN தேவர் BIGG BOSS TAMIL தென்காசி சூர்யா அஜித் விடுமுறை கள்ளக்காதல் தீபாவளி திருப்பரங்குன்றம் மதுரை ELECTION COMMISSION CSK தூத்துக்குடி SURIYA கீர்த்தி சுரேஷ் வன்னியர்