Tamil News & POLLING

 

நெல்லையில் எடப்பாடி பழனிசாமி நாளை பிரசாரம்

2 hours ago 27 மார்ச் 2026 10:50 PM | views : 27

நெல்லை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நெல்லை டவுன் வாகையடி முனையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வேட்பாளர்களை அறிமு கம் செய்து பிரசாரம் செய்கிறார்.



தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி இடஒதுக்கீடுகள் முடிவு செய்யப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில் அ.தி.மு.க. 169 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்காக 2 கட்டங் களாக 150 வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து விட்டார். இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அ.தி.மு.க. போட் டியிட உள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்களையும் அறிவித்து உள்ளார்.



சென்னையில் தனது பிரசார பயணத்தை தொடங்கிய அவர், தொகுதி வாரி யாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) எடப்பாடி பழனிசாமி கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார்.பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நெல்லை டவுன் வாகையடி முக்கு பகுதிக்கு வருகிறார்.


அங்கு திறந்த ஜீப்பில் நின்றவாறு நெல்லை தொகுதி வேட்பாளர் தச்சை என்.கணேசராஜா, பாளையங்கோட்டை தொகுதி வேட்பாளர் சைய்யது சுல் தான் சம்சுதீன் ஆகியோரை அறிமுகம் செய்து, அவர்களை ஆதரித்து பிர சாரம் செய்கிறார்.


இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியி னர் உற்சாகம் அடைந்துள்ளனர். தேர்தல் பிரசார வேலைகளில் களம் இறங்கி மும்முறமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மறுநாள் 30-ந்தேதி (திங்கட்கிழமை) எடப்பாடி பழனிசாமி தென்காசி மற் றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI BJP பாஜக அண்ணாமலை TVK தவெக AMMK ANNAMALAI TAMIL NADU ANBUMANI RAMADOSS MK STALIN TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் ADMK AIADMK எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் PMK பாமக ரஜினிகாந்த் முக ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் கனமழை தமிழகம் அன்புமணி ராமதாஸ் தமிழக வெற்றிக் கழகம் CONGRESS இந்திய அணி UDHAYANIDHI STALIN கோவை கொலை சட்டசபை தேர்தல் தமிழ்நாடு சீமான் COIMBATORE EDAPPADI PALANISWAMI INDIAN CRICKET TEAM AJITH அமமுக வடகிழக்கு பருவமழை KEERTHY SURESH தீபாவளி பிரதமர் மோடி கைது PARLIAMENT ELECTION வன்னியர் தென்காசி ASSEMBLY ELECTIONS விடுமுறை திருமாவளவன் TAMIL ACTRESS தேவர் நெல்லை NELLAI TAMILAGA VETTRI KAZHAGAM SEEMAN பாலியல் தொல்லை கீர்த்தி சுரேஷ் கள்ளக்காதல் NORTHEAST MONSOON டிரெண்டிங் நடிகை THIRUMAVALAVAN OPS மதுரை MADURAI CSK PRIME MINISTER MODI TAMIL CINEMA திருப்பரங்குன்றம் SURIYA டாப் நியூஸ் ஓபிஎஸ் அஜித் திருநெல்வேலி