சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தவெக நிர்வாகி பாம்பு தினேஷை காவல்துறையினர் கைது செய்தனர்.சென்னை காசிமேடு பகுதியில் தேர்தல் வாக்குப் பதிவு நாளான ஏப்ரல் 23 ஆம் தேதி வீட்டுக்கு வெளியே 10 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது சிறுமியை மிரட்டி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாம்பு தினேஷ் என்பவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பாம்பு தினேஷ் மீது போக்சோ வழக்கு பதிந்து நேற்றிரவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.கைது செய்யப்பட்ட தினேஷ் தவெகவின் 43 வது வார்டு வட்டச் செயலாளர் என்பதும், அக்கட்சிக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
« முந்தைய செய்தி (Previous)
பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு 8-ந்தேதி வெளியாகுமா? வெளியான முக்கிய...உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்: