POLLING FLAMES

 

விஜய்தான் முதல்வர்; மக்கள் தீர்ப்பிற்கு குறுக்கே ஆளுநர் நிற்பதா? - ஜோதிமணி எம்.பி.

57 minutes ago 06 மே 2026 03:04 PM | views : 17

விஜய்தான் முதல்வர்; மக்கள் தீர்ப்பிற்கு குறுக்கே ஆளுநர் நிற்பது சரியல்ல என்று ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்தப் பதிவில், “ஆளுநர் மாளிகையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் சட்டப்பேரவை மட்டுமே. இதுகுறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் தெளிவாக உள்ளன.தனிப்பெரும் கட்சியான தவெக தலைவர் விஜய்யை மக்கள் முதல்வர் என்று முடிவுசெய்திருக்கிறார்கள். மக்கள் தீர்ப்பிற்கு குறுக்கே ஆளுநர் நிற்பது சரியல்ல. மாண்புமிகு ஆளுநர் அவர்களுக்கு இந்த அளவிற்கு அரசியலும், அரசியல் சாசன விதிகளும் தெரியும் என்று நம்புகிறேன்.


பாஜக ஆளுநர் மாளிகை வழியாக அரசியல் செய்வதை உடனே நிறுத்தவேண்டும். மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தவெக தலைவர் விஜய்யை உடனடியாக ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.முன்னதாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் திங்கள்கிழமை வெளியான நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில் தனிப்பெரும்பான்மை இல்லாததால் சிறிய கட்சிகளின் ஆதரவைக் கோரியிருந்தது. ஆட்சியமைக்க ஆதரவு கோரி தவெக தலைவர் விஜய் கேட்டுக்கொண்டதன் பேரில் தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் தேசிய தலைமை ஆதரவு தெரிவித்துள்ளது. வரும் தேர்தல்களிலும் இந்தக் கூட்டணி தொடரும் என்றும் அதே நேரத்தில் மதவாத சக்திகளுடன் ஒருபோதும் கூட்டணி வைக்கக்கூடாது என்ற நிபந்தனையையும் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் MK STALIN பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS AIADMK TAMIL NADU இந்திய அணி PMK தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் UDHAYANIDHI STALIN கனமழை பாமக ரஜினிகாந்த் CONGRESS முக ஸ்டாலின் PARLIAMENT ELECTION கோவை INDIAN CRICKET TEAM திருமாவளவன் தமிழகம் அன்புமணி ராமதாஸ் COIMBATORE கொலை EDAPPADI PALANISWAMI தமிழ்நாடு தேவர் வன்னியர் அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி சீமான் கைது OPS KEERTHY SURESH தமிழக சட்டசபை தேர்தல் சூர்யா தீபாவளி கொரோனா நெல்லை BIGG BOSS TAMIL AJITH ஓபிஎஸ் THIRUMAVALAVAN சட்டசபை தேர்தல் SURIYA NELLAI TAMIL ACTRESS பாலியல் தொல்லை கள்ளக்காதல் அன்புமணி தூத்துக்குடி ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் CSK மதுரை அஜித் வடகிழக்கு பருவமழை விடுமுறை கீர்த்தி சுரேஷ் RAJINIKANTH தென்காசி