தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த பிரியங்கா கைது

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வன்முறை சம்பவம் நிகழ்ந்த உத்தர பிரதேசத்தின் லகிம்பூர் கேரி பகுதிக்கு விவசாயிகளை சந்திக்கச் சென்ற பிரியங்கா காந்தி, காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.


இதனை அடுத்து, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக, பிரியங்கா காந்தி உள்ளிட்ட 11 பேர் மீது உத்தரப்பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel