ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் மதுரையை சேர்ந்தவ டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யாவை போலீசார் செவ்வாய்க்கிழமை அதிரடியாக கைது செய்துள்ளனர். அவருடன், அவது நண்பர் சிக்கா என்கிற டிக்கந்தரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
ரவுடி பேபி என்கிற பெயரில் டிக் டாக் செய்து பிரபலமானவர் ரவுடி பேபி சூர்யா. இவர் அடிக்கடி ஆபாசமாக பேசி யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வீடீயோ வெளியிட்டு வந்துள்ளார். ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் பெண்கள் குழு ஒன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இந்த நிலையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நடத்தி வரும் யூடியூப் சேனல் குறித்து ரவுடி பேபி சூர்யா ஆபமாக தகாத முறையில் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் ரவுடி பேபி சூர்யா மற்றும் அவருடைய நண்பர் சிக்கா என்கிற சிக்கந்தரையும் கைது செய்துள்ளனர்.
பெரியநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இவரது சேனலில் வரும் நிகழ்ச்சி தொடர்பாக ரவுடி பேபி சூர்யா தகாத முறையில் ஆபாசமாக பேசியுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் சூர்யாவும், அவரது நண்பரான சிக்கா என்கிற சிக்கந்தரும் அந்த பெண்ணை தகாத முறையில் யூ டியூபில் விமர்சித்துள்ளனர்.
ரவுடி பேபி சூர்யா தன்னை அவதூறாகவும் ஆபாசமாக பேசியது குறித்து அந்த பெண்ணும் அவரது கணவரும் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். கோவை மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில், ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கந்தர் ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி அவதூறாக பேசியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ஜெயதேவி விசாரித்து வந்தார்.
இந்த நிலையில், மதுரை அருகே ரவுடி பேபி சூர்யா மற்றும் நண்பர் சிக்கந்தரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவருடன் அவரது நண்பர் சிக்கா என்கிற சிக்கந்தரையும் போலிசார் கைது செய்துள்ளனர். ஆபாசமாக பேசி அவதூறு செய்த வழக்கில் டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யாவும் அவருடைய நண்பர் சிக்காவும் ஜோடியாக கைது செய்யப்பட்டுள்ளது சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்?
முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன?
பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?
நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், மத்திய அரசின் தொழிலாள விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பன
காவல்துறை விசாரணையில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்திருந்த பேராசிரியர் நிகிதா பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. ஆனால் அந்த புகைப்படத்தில் இருப்பவர் பேராசிரியர் நிகிதா இல்லை என்ற உண்மை தற்போது தெரிய வந்துள்ளது. அந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என்ற உண்மையும்
ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்: விமானி உள்பட 2 பேர் பலி
பொது வேலைநிறுத்தம் : கேரளா செல்லும் பஸ்கள் இயங்கவில்லை
பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து- தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்
2-வது டெஸ்ட்: ஆகாஷ் தீப் அபார பந்துவீச்சு... இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
Fact Check : அண்ணாமலை உடன் இருப்பது நிகிதா இல்லை... அவர் யார் தெரியுமா?
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!