ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் கதை இதுதான்!

ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் கதை இதுதான்!

  ஜூன் 20, 2022 | 07:42 am  |   views : 104


ரஜினிகாந்த் நடிப்பில் முன்னதாக வெளியான அண்ணாத்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் அடுத்ததாக பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் இணைந்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த படத்திற்கு ஜெயிலர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.



நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படமும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில் ஜெயிலர் படத்தை சிறப்பாக கொண்டு வர வேண்டும் என்ற முடிவில் உறுதியாக உள்ள இயக்குனர், படத்தின் கதை மற்றும் திரைக்கதையை வடிவமைத்து வருகிறார்.



கன்னடத்தில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சிவராஜ் குமார் ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் இணையவுள்ளார். இந்த படத்தில் நடிக்குமாறு ஐஷ்வர்யாராயை படக்குழுவினர் அணுகியுள்ளனர். இருப்பினும் அவர் இடம்பெறுவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. மேலும் அனிருத் இசையமைக்கிறார்.



தற்போது ஜெயிலர் படத்தின் கதை இதுதான் என ஒரு செய்தி உலா வருகிறது. அதாவது ஜெயிலர் படத்தில் சிறையில் இருக்கும் ஒரு தீவிரவாதியை தப்பிக்க வைக்க வெளியிலிருந்து ஒரு நபர் வருகிறார் என்றும் அவரை தடுக்க ஜெயிலர் போராடுவது போல் கதை அமைக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.




அதாவது அந்த தீவிரவாதி கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கிறார் என்றும், ஜெயிலராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்ற தகவல் இணையத்தில் உலா வருகிறது.






நாளை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - ரிசல்ட் பார்ப்பது எப்படி?

2023-05-07 07:43:07 - 3 weeks ago

நாளை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - ரிசல்ட் பார்ப்பது எப்படி? மார்ச்-ல் நடைபெற்ற 2023 கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (மே 8ம் தேதி) காலை 9.30 மணி அளவில் வெளியிடப்படவுள்ளது. தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்ததேதி/மாதம்/ வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதள


இணையத்தில் வைரலாகும் ’டைமண்ட் லிப்ஸ்’ மேக்கப்.. நீங்களும் முயற்சிக்க டிப்ஸ்..!

2023-05-07 07:40:07 - 3 weeks ago

இணையத்தில் வைரலாகும் ’டைமண்ட் லிப்ஸ்’ மேக்கப்.. நீங்களும் முயற்சிக்க டிப்ஸ்..! ஆண், பெண் என அனைவரும் தற்போதைய காலத்தில் மேக்கப் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். எனவே தான், ஆழகுசாதன பொருட்கள், மேக்கப் டிப்ஸ் ஆகிய வீடியோக்கள் இணையதளங்களில் அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக “Diamond Lips” என்ற ஹேஷ்டேக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, அதிகமாக மேக்கப் போடாமல் குறைந்த