பள்ளிகளுக்கு குளிர் கால விடுமுறையை ஒருவாரம் நீட்டித்து பஞ்சாப் மாநில அரசு விடுமுறையை அளித்துள்ளது.
பஞ்சாப் பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கு குளிர்கால விடுமுறையாக டிசம்பர் 25 (2022) முதல், ஜனவரி 1 (2023) ஆம் தேதி வரை விடுமுறை அளித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் நிலவும் காலநிலை காரணமாக அந்த மாநிலத்தில் இருக்கும் அரசு, தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் என அனைத்து பள்ளிகளுக்கும் ஜனவரி 7ஆம் தேதி வரை விடுமுறையை நீட்டித்து பஞ்சாப் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல 2023 ஜனவரி 1ம் தேதி முதல் ஜனவரி 15ம் தேதி வரை டெல்லியில் அனைத்து பள்ளிகளுக்கும் குளிர்கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 9 முதல் 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு மட்டும் ஜனவரி 2ம் தேதி முதல் 14 வரை சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்திலும் டிசம்பர் 25 முதல் ஜனவரி 5ம் தேதி வரை பள்ளிகளுக்கு குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. உத்திரப்பிரதேசத்தில் கடும் குளிர் நிலவும் லக்னோவில் டிசம்பர் 31 வரை பள்ளிகளை காலை 10 மணிக்கு தொடங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடும் பனிமூட்டம் மற்றும் குளிர் எதிரொலியாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநில அரசுகளும் பள்ளிகளின் வேலை நேரத்தை மாற்றி அமைத்துள்ளன.
உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?
பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன?
இவன் இறக்கை இல்லாமல் பறப்பான், கண் இல்லாமல் அழுவான், அவன் யார்?
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!