POLLING FLAMES

 

மகளுடன் ஓடிய இளைஞனின் சகோதரியை குடும்பமே சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம்!

1 year ago 12 ஆகஸ்ட் 2024 07:59 AM | views : 220
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தங்கள் வீட்டுப் பெண்ணை இழுத்துச்சென்ற இளைஞனின் சகோதரியைப் பெண்ணின் தகப்பன் உட்பட 4 பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் கோரக்பூரைச் சேர்ந்த ரவீந்தர் சிங் என்பவரது மகள் அப்பகுதியில் வசித்து வந்த பஞ்சாபை சேர்ந்த இளைஞனை காதலித்து வந்த நிலையில் ரவீந்தர் சிங்கின் எதிர்ப்பை மீறி கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் புது வாழ்வைத் தொடங்க ஊரைவிட்டு சென்றுள்ளனர். இதனால் ஆத்திரத்தில் இருந்த ருந்த ரவீந்தர் சிங், அவரது தம்பி வீரேந்தர் சிங், மகன் அமன் சிங் மற்றும் உறவினர் சந்தோஷ் சிங் ஆகிய நால்வருமாக சேர்ந்து கடந்த மே 1 ஆம் தேதி பஞ்சாபில் அந்த இளைஞனின் சொந்த ஊரான லூதியானாவுக்கு சென்றுள்ளனர். அங்கு வீட்டில் தனது மகளை இழுத்துச்சென்ற இளைஞனின் சகோதரி இருந்த நிலையில் அவரை ரவீந்தர் அவரது தம்பி, மகன், உறவினர் என நால்வருமாக சேர்ந்து இளைஞனின் சகோதரியைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோவும் எடுத்துள்ளனர்.

நடந்ததை வெளியே சொன்னால் வீடியோவை ரிலீஸ் செய்துவிடும் என்று மிரட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இதனால் கடந்த 3 மாதகங்களாகப் பயத்தில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சியிலும் இருந்த இளைஞனின் சகோதரி தற்போது இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளதால் இந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இத்தொடர்ந்து அவர்கள் நால்வர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளைஞனின் சகோதரி இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK MK STALIN எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN TAMIL NADU மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் PMK டிடிவி தினகரன் AIADMK ரஜினிகாந்த் UDHAYANIDHI STALIN பாமக காங்கிரஸ் முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் கனமழை இந்திய அணி PARLIAMENT ELECTION CONGRESS தமிழகம் கோவை COIMBATORE கொலை அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI திருமாவளவன் AJITH INDIAN CRICKET TEAM TAMILAGA VETTRI KAZHAGAM OPS தமிழ்நாடு சீமான் கைது பிரதமர் மோடி KEERTHY SURESH அமமுக TAMIL ACTRESS BIGG BOSS TAMIL ஓபிஎஸ் கொரோனா தமிழக சட்டசபை தேர்தல் சட்டசபை தேர்தல் NELLAI நெல்லை THIRUMAVALAVAN மதுரை ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் தேவர் தீபாவளி கீர்த்தி சுரேஷ் RAJINIKANTH தென்காசி வடகிழக்கு பருவமழை தூத்துக்குடி வன்னியர் சூர்யா அஜித் கள்ளக்காதல் SURIYA CSK விடுமுறை