Tamil News & POLLING

 

ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்.. அதே கடிதத்தை மீண்டும் அனுப்பிய தேர்தல் ஆணையம்!

3 years ago 02 ஜனவரி 2023 12:16 PM | views : 141
தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை அதிமுக திருப்பி அனுப்பிய நிலையில், தபால் மூலமாக மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக, தேர்தல் ஆணையம் ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை வடிவமைத்துள்ளது.

ரிமோட் வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பான செயல்முறை விளக்க கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க, அதிமுகவுக்கு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிடப்பட்டு இருந்தது.

உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளபோது, அதிமுக பொதுக்குழு செல்லும் என ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பிற்கு இடைக்கால தடை பிறப்பிக்காதபோதும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என வந்த கடிதத்திற்கு அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் நேரில் கடிதம் வழங்கிய போது, ஒருங்கிணைப்பாளர் என யாரும் இல்லை என்று கூறி கடிதத்தை வாங்க மறுத்துவிட்டனர். எனினும், தேர்தல் ஆணைய ஆவணங்களின்படியே அதிமுகவுக்கு கடிதம் அனுப்பியதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கமளித்தார்.

இந்நிலையில், அதே கடிதத்தை மீண்டும் தபால் மூலமாக அதிமுக அலுவலகத்திற்கு தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ளது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK ANNAMALAI தவெக MK STALIN AMMK TTV DHINAKARAN எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் ADMK AIADMK TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் மு.க.ஸ்டாலின் முக ஸ்டாலின் சீமான் ANBUMANI RAMADOSS INDIAN CRICKET TEAM கனமழை தமிழகம் தமிழக வெற்றிக் கழகம் PMK இந்திய அணி ரஜினிகாந்த் பாமக UDHAYANIDHI STALIN CONGRESS அன்புமணி ராமதாஸ் கைது PARLIAMENT ELECTION பிரதமர் மோடி சட்டசபை தேர்தல் EDAPPADI PALANISWAMI KEERTHY SURESH அமமுக NELLAI தீபாவளி கொலை வடகிழக்கு பருவமழை SEEMAN திருநெல்வேலி COIMBATORE கோவை AJITH TAMIL ACTRESS கொரோனா தமிழ்நாடு மதுரை நெல்லை கள்ளக்காதல் TAMILAGA VETTRI KAZHAGAM ELECTION COMMISSION THOOTHUKUDI தென்காசி திருப்பரங்குன்றம் வன்னியர் நயினார் நாகேந்திரன் OPS தேவர் பாலியல் தொல்லை NORTHEAST MONSOON டிரெண்டிங் TAMIL CINEMA அஜித் தமிழக அரசு நாம் தமிழர் கட்சி விடுமுறை SENGOTTAIYAN ஓபிஎஸ் டாப் நியூஸ் THIRUMAVALAVAN ASSEMBLY ELECTIONS 2024 T20 WORLDCUP கீர்த்தி சுரேஷ் MADURAI திருமாவளவன்