இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அஜித் நடித்திருக்கும் துணிவு மற்றும் விஜய் நடித்திருக்கும் வாரிசு ஆகிய திரைப்படங்கள் வெளியாகின்றன. இந்த இரண்டு திரைப்படங்களும் 11ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இரண்டு பெரிய நடிகர்களின் படம் ரிலீஸ் என்பதால் வரும் பொங்கல் தியேட்டர்களில் களைகட்டும் என்றே தெரிகிறது. தற்போது முன்பதிவு தொடங்கிவிட்ட நிலையில் சிறப்புக் காட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, இந்த நிலையில் இரண்டு படங்களுக்கான முதல் காட்சி எப்போது என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. மேலும் இது குறித்து படக் குழுவினர் அதிகாரப்பூர்வமான அறிவிப்பார்கள் என்றும் எதிர்பார்த்து இருந்தனர். அதில் வாரிசு திரைப்படத்தின் விநியோகஸ்தர் லலித் குமார் விஜய் படத்தை இரவு 1 மணிக்கு சிறப்பு காட்சி திரையிட திட்டமிட்டார். அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் இரண்டு திரைப்படங்களுக்கும் ஒரே நேரத்தில் சிறப்பு காட்சி திரையிட வேண்டாம் என திரையரங்கு உரிமையாளர்கள் படக்குழுவினரிடம் கோரிக்கை வைத்தனர். அதேபோல் காவல்துறையினரும் ரசிகர்களுக்குள் ஏற்படும் மோதலை தவிர்க்கும் விதமாக ஒரே நேரத்தில் இரண்டு படங்களுக்கான சிறப்பு காட்சியையும் திராவிட வேண்டாம் என வாய்மொழி உத்தரவிட்டிருந்தனர். அதன்படி, அஜித் நடித்திருக்கும் துணிவு திரைப்படத்தை 11ஆம் தேதி அதிகாலை ஒரு மணிக்கும், விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படத்தின் சிறப்பு காட்சியை அதிகாலை 4 மணிக்கும் திரையிட விநியோக நிறுவனங்கள் முடிவெடுத்தனர். இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் ஸ்பெஷல் காட்சியை அஜித்தின் மனைவி ஷாலினி சிறப்பு திரையரங்கில் பார்த்து ரசித்தார். அவருடன் அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா உள்ளிட்ட சிலரும் உடன் இருந்தனர்.
சென்னை 4 ப்ரேம்ஸில் படம் பார்த்த ஷாலினியுடன் ரசிகர்கள் சிலர் எடுத்துகொண்ட புகைப்படமும் வைரலாகி வருகிறது. மேலும் ஷாலினி அஜித்துடன் படம் பார்த்த சிலர் இது குறித்து ட்வீட் செய்துள்ளனர். அதில் படம் சிறப்பாக வந்துள்ளதாகவும், நிச்சயம் பொங்கல் ஹிட்டாக துணிவு அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்
முத்து வீட்டுக்குள்ளே தட்டு பலகை அது என்ன ?
கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்?
அள்ள முடியும், ஆனால் கிள்ள முடியாது அது என்ன?
அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் - ஓ.பன்னீர்செல்வம்
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி அங்கீகாரம் - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் போட்டி
சீமானுக்கு ஆதரவாக ஆதாரம் தருகிறேன் - அண்ணாமலை
உடல் இச்சை வந்தால் தாயோ, மகளோ.. பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு..
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!