ஆந்திராவின் அனக்காப்பள்ளி மாவட்டத்தில் இலவச வீட்டு மனைப் பட்டாவிற்கு விண்ணப்பித்த பெண்ணிற்கு, தகாத முறையில் வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பிய கிராம வருவாய் அதிகாரிக்கு, பெண்ணின் உறவினர்கள் தர்ம அடி கொடுத்தனர்.
ஜெகன் அண்ணா காலனி என்ற பெயரில் ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இலவச வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் அனக்காப்பள்ளி மாவட்டத்தில் உள்ள பி.எல்.புரம் கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவர் ஜெகன் அண்ணா காலனியில் இலவச வீட்டு மனை கேட்டு விண்ணப்பித்திருந்தார். அந்தப் பெண்ணிற்கு கிராம வருவாய் அதிகாரி பாஸ்கர் நாயுடு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
அதில் இலவச வீட்டு மனை தேவை என்றால் என்னுடன் ஒரு நாள் உல்லாசமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் ஆவேசம் அடைந்த அந்த பெண், அவருடைய கணவர் மற்றும் உறவினர்கள், கிராம வருவாய் அதிகாரியின் அலுவலகத்திற்கு சென்று அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
இதனையடுத்து அவர் தலைமறைவானார். இதுகுறித்து தகவல் அறிந்த அனக்காப்பள்ளி காவல்நிலைய போலீசார் கிராம வருவாய் அதிகாரியை கைது செய்வதற்காக தீவிரமாக தேடி வருகின்றனர்.
உங்களுக்கு சொந்தமானத ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்?
படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ?
ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?
கள் இறக்க அனுமதி கோரி மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு தயாராகும் விவசாயிகள்
செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!
வியூக மன்னர்களால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கும் என்பது தெரியவில்லை - அமைச்சர் சேகர்பாபு
தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு..!!
அதிமுக பொதுச்செயலாளர் ஆகிறாரா செங்கோட்டையன்?
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!