திருப்பத்தூர்:சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நடுவிக்கோட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் நேற்று காலை வேலை நிமிர்த்தமாக வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். மதிய நேரத்தில் பூட்டியிருந்த வெங்கடேசன் வீட்டில் மேற்கூரைகள் பிரிக்கப்பட்டு கிடந்தது.இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கும், வெங்கடேசனுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வெங்கடேசன் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றனர்.
அப்போது முன் அறையில் பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.மேலும் பாத்திரங்கள், பேன் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் மூட்டை கட்டி வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து போலீசார் வீடு முழுவதும் சோதனையிட்டபோது படுக்கையறையில் வாலிபர் ஒருவர் குறட்டை விட்டபடி நன்றாக தூங்கி கொண்டிருந்தார்.படுக்கையறை அருகே மது பாட்டில்களும், பிரியாணி சாப்பிட்ட பொட்டலங்களும் இருந்தன.
போலீசார் அந்த வாலிபரை தட்டி எழுப்பினர். தூக்கத்தில் இருந்து முழித்து கொண்ட அந்த வாலிபர் தன் முன்னே போலீசார் நிற்பதை கண்டு திருதிருவென முழித்தார். அவரிடம் போலீசார் கிடுக்குப்படி விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் வெட்டுக்குளம் அருகே உள்ள மேலசேத்தன்ஏந்தல் கிராமத்தை சேர்ந்த சுதந்திரதிருநாதன் (வயது27) என்பது தெரியவந்தது. பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்க வந்த இவர் நேற்று மதியம் பிரியாணி, மதுபாட்டிலுடன் வெங்கடேசனுடன் வீட்டில் ஏறி குதித்துள்ளார்.பின்னர் வீட்டில் திருடிய பொருட்களை மூட்டை கட்டிய சுதந்திர திருநாதனுக்கு பிரியாணியும், மதுவும் சாப்பிட்டு விட்டு செல்லலாம் என தோன்றியுள்ளது.
அதன்படி இரண்டையும் சாப்பிட்ட பின் அவனுக்கு போதை தலைக்கு ஏறியது. சிறிது நேரம் கண்ணயர்ந்து விட்டு செல்லலாம் என படுக்கையறையில் சுதந்திரநாதன் தூங்கியது தெரியவந்தது. போலீசார் சுதந்திர திருநாதனை கைது செய்து வா ராஜா!... ஜெயிலில் போயி தூங்கலாம் என்று வேடிக்கையுடன் அழைத்து சென்றனர்.திருட வந்த வீட்டில் வாலிபர் தூங்கி பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாக மாறியுள்ளது. அவரை கைது செய்த வீடியோவும் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
தன் மேனி முழுதும் கண்ணுடையாள் தன்னிடம் சிக்கியபேரைச் சீரழிப்பாள் அவள் யார்?
மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?
திருமாவளவன் மனது முழுக்க முழுக்க நம்முடன்தான் இருக்கும் - விஜய்
2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் - ஆதவ் அர்ஜூனா
அம்பேத்கர் சிலையுடன் செல்பி எடுத்துக்கொண்ட தவெக தலைவர் விஜய்
தமிழகத்திற்கு ரூ. 944 கோடி பெஞ்சல் புயல் நிவாரண நிதி - மத்திய அரசு அறிவிப்பு
இந்தியா ஆஸ்திரேலியா இரண்டாம் டெஸ்ட் முதல் நாள் ஸ்கோர்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!