Tamil News & POLLING

 

திருவட்டார் அருகே பாலியல் பலாத்காரம் செய்து பெண் கொலை: என்ஜினீயர் கைது

3 years ago 17 பிப்ரவரி 2023 07:18 AM | views : 167
திருவட்டார் : திருவட்டாரை அடுத்த மூவாற்று முகம் பகுதியை சேர்ந்தவர் எட்வின் (வயது 28). டிப்ளமோ என்ஜினீயர். எட்வினின் தந்தை இறந்து விட்டார். அதன்பின்பு எட்வின் தாயாருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இவர்களின் பக்கத்து வீட்டில் உறவினர் கமலதாஸ் வசித்து வருகிறார்.

கமலதாசின் மனைவி லைலா( 47). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. இதனால் அவர்கள் கணவர் வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்களின் மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனால் வீட்டில் கமலதாசும், அவரது மனைவி லைலாவும் மட்டுமே இருந்தனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் லைலா தலையில் காயங்களுடன் மயங்கி கிடந்தார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.இந்த சம்பவம் குறித்து கமலதாஸ் திருவட்டார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கமலதாஸ், வீட்டில் இல்லாத போது அவரது உறவினர் எட்வின், லைலா வீட்டிற்கு சென்று வந்தது தெரியவந்தது. எட்வினை தேடிய போது அவர் தலைமறைவாகி இருந்தார்.

இதற்கிடையே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட லைலாவின் உடல் நிலை மேலும் மோசமடைந்தது. அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.அப்போது ஏற்பட்ட தகராறில் லைலா தலையில் தாக்கப்பட்டு மயக்கம் அடைந்துள்ளார் என்று டாக்டர்கள் கூறினர். லைலாவை பாலியல் பலாத்காரம் செய்து, தாக்கியது யார்? என்பது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் லைலாவின் பக்கத்து வீட்டில் வசித்த உறவுக்கார வாலிபர் எட்வின் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் எட்வினை ஆற்றூர் கழுவன்திட்டை பகுதியில் வைத்து பிடித்தனர்.பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் லைலாவை தாக்கி, பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார்.

லைலாவின் கணவர் வீட்டில் இல்லாத போது அவர் படுக்கை அறையை எட்டிப்பார்ப்பேன். அங்கு அவர் தூங்கும் அழகை ரசிப்பேன். இதனை ஒருநாள் லைலா பார்த்து விட்டார். இதுபற்றி அவர் எனது தாயாரிடம் கூறி என்னை அவமானப்படுத்தினார்.இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்தேன், என்றார்.போலீசார் எட்வினை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
இதற்கிடையே ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த லைலா, சிகிச்சை பலன் இன்றி நேற்று நள்ளிரவு பரிதாபமாக இறந்தார்.இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இது தொடர்பாக எட்வினை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK ANNAMALAI தவெக AIADMK ADMK AMMK TAMIL NADU MK STALIN டிடிவி தினகரன் TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் சீமான் உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS முக ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி காங்கிரஸ் இந்திய அணி தமிழகம் PMK ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் கனமழை UDHAYANIDHI STALIN PARLIAMENT ELECTION INDIAN CRICKET TEAM CONGRESS பாமக கைது பிரதமர் மோடி அன்புமணி ராமதாஸ் NELLAI KEERTHY SURESH அமமுக EDAPPADI PALANISWAMI கொலை வடகிழக்கு பருவமழை SEEMAN சட்டசபை தேர்தல் மதுரை தென்காசி திருமாவளவன் THIRUMAVALAVAN நெல்லை TAMILAGA VETTRI KAZHAGAM TAMIL ACTRESS கள்ளக்காதல் COIMBATORE OPS தமிழ்நாடு கோவை திருநெல்வேலி நாம் தமிழர் கட்சி பாலியல் தொல்லை டிரெண்டிங் டாப் நியூஸ் நயினார் நாகேந்திரன் NORTHEAST MONSOON வன்னியர் தீபாவளி தேவர் THOOTHUKUDI TAMIL CINEMA ஓபிஎஸ் MADURAI AJITH விடுமுறை கீர்த்தி சுரேஷ் ASSEMBLY ELECTIONS தமிழக அரசு திருப்பரங்குன்றம் ELECTION COMMISSION