அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்க தடை!

By Admin | Published in செய்திகள் at மார்ச் 19, 2023 ஞாயிறு || views : 438

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்க தடை!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்க தடை!

சென்னை : அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி கடந்த 9 மாதங்களாக பதவி வகித்து வருகிறார்.இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் வருகிற 26-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.

தொடர்ந்து இன்றும் மனுதாக்கல் நடைபெறுகிறது.பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்துள்ள நிலையில் வேறு யாரும் மனுதாக்கல் செய்யாவிட்டால் இன்று பிற்பகல் 3 மணிக்கு வேட்புமனு தாக்கல் முடிந்த உடனேயே பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் தனித் தனியாக அவசர வழக்குகளை தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், "அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நாங்கள் தொடர்ந்துள்ள வழக்குகளில் அ.தி.மு.க. தரப்பில் பதில் மனுதாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. ஆனால் அன்று மாலையே அவசர அவசரமாக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்ட விரோதமாக வெளியிடப்பட்டுள்ளது.பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ள போது பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிக்கப்பட்டு உள்ளது. வார இறுதி நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய அறிவிப்பு வெளியிட்டதன் மூலம் எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு யாரையும் போட்டியிட விடாமல் தடுத்துள்ளனர்.

எனவே இந்த தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவிடம் மனுதாரர்களின் வக்கீல்கள் முறையிட்டனர். இதை ஏற்றுக்கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி இந்த வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு விசாரிக்க அனுமதி வழங்கினார்.அதன்படி இந்த வழக்கு அவசர வழக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பினரும் பரபரப்பான வாதங்களை முன் வைத்தனர்.மனோஜ்பாண்டியன் தரப்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமன் வாதாடினார். அவரது வாதம் வருமாறு:-வேட்புமனுதாக்கல் நிறைவு என இன்று மாலையே பொதுச்செயலாளர் தேர்வு என அறிவிக்கப்படலாம்.ஜெயலலிதாவே நிரந்தர பொதுச்செயலாளர் என கூறி விட்டு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவே கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகித்த பதவிகளை வேறு யாரும் அடைய முடியாது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக யாரையும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று குறிப்பிட்டே கடிதம் அனுப்புகிறது.தலைமை கழக நிர்வாகியாக அல்லாத அடிப்படை உறுப்பினர்கள் போட்டியிட முடியாதபடி விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

பொதுச்செயலாளர் தேர்தல் அட்டவணையை வெள்ளிக்கிழமை வெளியிட்டு ஞாயிற்றுக்கிழமை மனுதாக்கல் முடிவு என்று அவசரம் காட்டியுள்ளனர். கட்சியில் 1.5 கோடி தொண்டர்கள் உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதா? நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில் அவசர அவசரமாக தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தப்படுகிறது.பொதுக்குழு தீர்மான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு அப்படி என்ன அவசரம்? ஓரிரு நாட்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு அதுவரை பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தக்கூடாது என்று உத்தரவிடுங்கள். அ.தி.மு.க. பொதுச்செயலராளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் வாதாடினார்.வைத்தியலிங்கம் சார்பில் மூத்த வக்கீல் மணிசங்கர் வாதாடியதாவது:-அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிப்பதால் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனவே தேர்தலை ஒரு வாரம் தள்ளி வைக்கலாம். அதற்குள் பொதுக்குழு வழக்கை விசாரிக்கலாம்.நாளை வந்து ஒரே ஒரு வேட்பு மனுதான் வந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி வெற்றி என்று சொல்வார்கள். பொதுச்செயலாளர் தேர்தலில் வேறு யாரையும் பங்கேற்க விடாமல் தடுத்துள்ளனர்.இவ்வாறு அவர் வாதாடினார்.ஜே.சி.டி. பிரபாகர் சார்பில் மூத்த வக்கீல் ஸ்ரீராம் வாதாடியதாவது:-ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கு நோட்டீசு கொடுக்காமல் கட்சியை விட்டு நீக்கிவிட்டனர்.

அதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது தேர்தல் நடத்துவது தவறு. ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் சட்டப்படி உள்ளது.அதனால் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த முடியாது. தேர்தல் அறிவிப்பு ஐகோர்ட்டு நடைமுறையை தவறாக பயன்படுத்துவது ஆகும்.இவ்வாறு அவர் வாதாடினார்.அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியலிங்கம் வாதாடியதாவது:-1.65 கோடி அ.தி.மு.க. உறுப்பினர்களின் குரல் நசுக்கப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.

ஆனால் அவர்கள் 1.65 கோடி தொண்டர்களின் ஆதரவை பெறவில்லை. அவர்களது ஆதரவும் இவர்களுக்கு இல்லை.கட்சியின் உள் விவகாரத்தில் தலையிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. தேர்தல் நடவடிக்கை தொடங்கி விட்டதால் ஐகோர்ட்டு தலையிட முடியாது. அதில் அநீதி இருந்தால் மட்டுமே தலையிட முடியும். இல்லையென்றால் தேர்தல் முடிந்த பிறகு வழக்கு தொடரலாம். பொதுக்குழு தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டது.இந்த 3 பேரும் கோர்ட்டுக்கு முதலில் போகவில்லை. கட்சி உரிமையை இழந்தவர்கள் 8 மாதங்களுக்கு பிறகு வழக்கு தொடர்ந்துள்ளனர். பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எந்த தடையும் இல்லை. கோர்ட்டுகள் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய பின்னர் தேர்தல் நடத்தப்படுகிறது.சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருந்தபோது தேர்தல் நடத்தப்படாது என்று உத்தரவாதம்...

ADMK EDAPPADI PALANISWAMI O PANNEER SELVAM அதிமுக எடப்பாடி பழனிசாமி ஓ பன்னீர்செல்வம்
Whatsaap Channel
விடுகதை :

படபடக்கும், பளபளக்கும், பண்டிகை வந்தால் வானில் பறக்கும். அது என்ன ?


விடுகதை :

சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். அவன் யார் ?


விடுகதை :

சிறகடித்து பரப்பவனை சமாதனத்துக்கு உதார்ணம் சொல்வர் அவன் யார்?


திருவள்ளூரில் சரக்கு ரயில் தடம் புரண்டு பயங்கர தீ விபத்து: ரயில் சேவை பாதிப்பு!

திருவள்ளூரில் சரக்கு ரயில் தடம் புரண்டு பயங்கர தீ விபத்து: ரயில் சேவை பாதிப்பு!


திமுக - சாரி மா மாடல் சர்கார்! விஜய் ஆவேசம்!

திமுக - சாரி மா மாடல் சர்கார்! விஜய் ஆவேசம்!


ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்: விமானி உள்பட 2 பேர் பலி

ராஜஸ்தானில் விழுந்து நொறுங்கிய போர் விமானம்: விமானி உள்பட 2 பேர் பலி


பொது வேலைநிறுத்தம் : கேரளா செல்லும் பஸ்கள் இயங்கவில்லை

பொது வேலைநிறுத்தம் : கேரளா செல்லும் பஸ்கள் இயங்கவில்லை


பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து- தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்

பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து- தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்


ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..

ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..


எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்

எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!


Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை

Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை


தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!

தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!


கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது..  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!


prev whatsapp Twitter facebook next