அண்ணாமலை அரசியல் நிலைப்பாட்டை தக்க வைக்க தி.மு.க. மீது குற்றச்சாட்டு வைக்கிறார்- கனிமொழி பேட்டி

ஏப்ரல் 14, 2023 | 08:38 am | views : 141
தூத்துக்குடி: சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதில் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ., மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.பின்னர் அவரிடம், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தி.மு.க.வினரின் சொத்துப்பட்டியலை வெளியிட்டது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது கனிமொழி எம்.பி. கூறும்போது, பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தனது அரசியல் நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொள்வதற்காக தி.மு.க.வினர் மீது இது போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார் என்றார்.
![]() |
![]() |
![]() |
![]() |
நாளை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - ரிசல்ட் பார்ப்பது எப்படி?
மார்ச்-ல் நடைபெற்ற 2023 கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (மே 8ம் தேதி) காலை 9.30 மணி அளவில் வெளியிடப்படவுள்ளது. தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்ததேதி/மாதம்/ வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
www.tnresults.nic.in,
www.dge1.tn.nic.in,
www.dge2.tn.nic.in,
www.dge.tn.gov.in
என்ற இணையதள
இணையத்தில் வைரலாகும் ’டைமண்ட் லிப்ஸ்’ மேக்கப்.. நீங்களும் முயற்சிக்க டிப்ஸ்..!
ஆண், பெண் என அனைவரும் தற்போதைய காலத்தில் மேக்கப் மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். எனவே தான், ஆழகுசாதன பொருட்கள், மேக்கப் டிப்ஸ் ஆகிய வீடியோக்கள் இணையதளங்களில் அதிகமாக உள்ளது.
அதிலும் குறிப்பாக “Diamond Lips” என்ற ஹேஷ்டேக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, அதிகமாக மேக்கப் போடாமல் குறைந்த