POLLING FLAMES

 

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

2 years ago 16 டிசம்பர் 2023 01:22 AM | views : 255
மேஷம்: பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர். வீண் குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். தொட்ட காரியங்கள் துலங்கும். பழைய பள்ளி, கல்லூரி நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பணவரவு திருப்தி தரும்.

ரிஷபம்: மகன், மகளின் திருமணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். முக்கிய பிரமுகர்களின் வீட்டு சுப நிகழ்ச்சிகளில் கவுரவிக்கப்படுவீர்கள்.

மிதுனம்: செலவுகளை தவிர்த்து சேமிக்க முயற்சிக்கவும். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியில் சொல்லி கொண்டிருக்காதீர்கள். உறவினர், நண்பர்களிடம் வீண் விவாதங்கள் வேண்டாம்.

கடகம்: குழப்பம் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். பழுதாகியிருந்த பழைய வாகனத்தை மாற்றி, சிலர் புதிது வாங்குவீர்கள். கிரஹப்பிரவேசம், திருமணம், சீமந்தம் என்று வீட்டில் விருந்தினர் வருகை அதிகரிக்கும்.

சிம்மம்: எந்த தடைகள், பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை சாமர்த்தியமாக சமாளிக்கும் சக்தி கிடைக்கும். முக்கிய பிரமுகர்களின் உதவியுடன் சில வேலைகள் முடிவடையும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

கன்னி: எல்லா வகையிலும் வெற்றி கிட்டும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பெரிய மனிதர்கள் ஆதரவாக இருப்பார்கள். திடீர் பணவரவு உண்டு. நீண்ட நாளாக இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி கிட்டும்.

துலாம்: நண்பர்கள், உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். பழைய இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கலை பொருட்கள் சேரும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பேசி பழகுவது நல்லது.

விருச்சிகம்: முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். மனஸ்தாபங்கள் நீங்கி, தம்பதிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வேற்றுமாநிலம் செல்லும் வாய்ப்பு வரும். மனைவிவழி உறவினர்களிடம் இணக்கமாக இருக்கவும்.

தனுசு: நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வரவேண்டிய பண பாக்கியும் கைக்கு வரும். புது வாகனம் வாங்குவீர்கள். வேற்றுமொழி பேசுபவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள்.

மகரம்: தாழ்வுமனப்பான்மை வந்து போகும். யாரை நம்புவது, நம்பாமல் இருப்பது என்பதில் குழப்பம் வரும். யாருக்காகவும் எதற்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். குடும்பத்துடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.

கும்பம்: வேலைச்சுமை இருக்கும். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். எந்த ஒரு வேலையையும், பிறரிடம் ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக முடிப்பது நல்லது. அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும்.

மீனம்: வெளியூரில் இருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வரும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK MK STALIN எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் TAMIL NADU டிடிவி தினகரன் TTV DHINAKARAN AIADMK ரஜினிகாந்த் ANBUMANI RAMADOSS கனமழை பாராளுமன்ற தேர்தல் இந்திய அணி PMK காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN முக ஸ்டாலின் பாமக தமிழகம் கோவை CONGRESS EDAPPADI PALANISWAMI AJITH PARLIAMENT ELECTION COIMBATORE திருமாவளவன் INDIAN CRICKET TEAM கொலை அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி சீமான் TAMILAGA VETTRI KAZHAGAM கைது அமமுக KEERTHY SURESH OPS தமிழ்நாடு NELLAI சட்டசபை தேர்தல் RAJINIKANTH நெல்லை கொரோனா தமிழக சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் வடகிழக்கு பருவமழை TAMIL ACTRESS THIRUMAVALAVAN தேவர் BIGG BOSS TAMIL தென்காசி சூர்யா அஜித் விடுமுறை கள்ளக்காதல் தீபாவளி திருப்பரங்குன்றம் மதுரை ELECTION COMMISSION CSK தூத்துக்குடி SURIYA கீர்த்தி சுரேஷ் வன்னியர்