வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து 'இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளன. இந்த கூட்டணி தலைவர்கள் ஏற்கனவே 3 முறை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர்.இந்த கூட்டணியின் 4-வது கூட்டம் டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, ஆர்ஜேடி தலைவர் லாலு, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட 28 கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிலையில், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மல்லிகார்ஜுன் கார்கேவை மம்தா பானர்ஜி முன்மொழிந்தார். மம்தாவின் கருத்திற்கு வைகோ, உபி. சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் ஆதரவளித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரதமர் வேட்பாளர் குறித்து மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், "எங்களின் இலக்கு வெற்றி தான். வெற்றிக்கு பிறகு தான் பிரதமர் யார் என முடிவு செய்யப்படும். பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்ற பின் எங்களிடம் போதுமான எம்.பிகள் இருப்பார்கள். அதன் பிறகு ஜனநாயக முறைப்படி பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்" என்றார்.
ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம் – அவன் யார்?
உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?
நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன?
மாந்திரீக பூஜை என்றால் என்ன? பன்னீர்செல்வம் கேள்விக்கு பதில் சொன்ன திமுக அமைச்சர்!
எடப்பாடிக்கு எதிரான போர்க்கொடி, செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு?
சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!
செங்கோட்டையனை சமாதானப்படுத்த முயற்சி செய்யும் அதிமுக !
சபாநாயகர் அப்பாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நாளை விவாதம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!