பிரதமர் மோடியின் அறிவுரையின்படி, வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை தூத்துக்குடி வருகிறார்.
இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் எக்ஸ் பதிவில், "மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 26-ந்தேதி (நாளை) மதியம் 2.30 மணிக்கு தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கிறார்.
முன்னதாக மதியம் 12.30 மணிக்கு வெள்ள பாதிப்புகள் குறித்து கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்" என கூறப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் நிர்மலா சீதாராமன், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி செல்கிறார்.தூத்துக்குடி டவுன், முத்தையாபுரம், ஏரல், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் சேதமடைந்த சாலைகள், வீடுகள், விளைநிலங்கள் ஆகியவற்றை பார்வையிடுகிறார்.
ஏற்கனவே மத்திய குழுவினர் வெள்ளம் வடிவதற்கு முன்பே நேரில் ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.தமிழக அரசு வெள்ள நிவாரண நிதியாக ரூ.21 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுள்ளது.
நிர்மலா சீதாராமன் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மதிப்பீடு செய்த பிறகு மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கும் நிவாரண நிதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேப்பர் கிடையாது வாய்பாடு தெரியாது . கணக்கிலோ புலி அது என்ன?
உடம்பு இல்லாதவனுக்கு தலையுடன் பூவும் உண்டு அவன் யார்?
தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!