Tamil News & POLLING

 

அப்பன் வீட்டு காசா? - உதயநிதிக்கு நிர்மலா சீதாராமன் கொடுத்த பதில் என்ன?

2 years ago 22 டிசம்பர் 2023 08:45 AM | views : 184
தென் தமிழ்நாட்டின் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த அதி கனமழையால், காணுமிடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளித்தது. திங்கட்கிழமை மழை நின்ற நிலையில், கடந்த இரண்டு தினங்களாக மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.



மீட்புப் பணிக்காக தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலினின் உத்தரவின்பேரில், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மற்றும் மூத்த ஐஏஎஸ்அதிகாரிகள் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டனர்.



இதற்கிடையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீட்புபணிக்காக பாதிக்கப்பட்ட மக்களுடன் இல்லாமல், செவ்வாய்கிழமை டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு சென்றது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.



அதி கனமழையால் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பும், வெள்ள நிவாரணப் பணிகளும் திமுகவிற்கு எதிராக அரசியலாக்கப்பட்டுள்ளது.



இதற்கிடையில், தென் மாவட்டங்களில் வெள்ளபாதிப்பு குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆனால், இந்தக் கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளருக்கு அழைப்பு விடுத்தும் தமிழ்நாடு அரசின் சார்பில் யாரும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றவில்லை என ஆளுநர் மாளிகைத் தரப்பு தெரிவித்தது.



இந்த நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமையன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த போது தமிழக அரசை கடுமையாகச் சாடினார்.



ஐந்து நாட்கள் முன்பு எச்சரிக்கை பெற்ற மாநில அளவில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை. வெள்ளத்தை தவிர்ப்பதற்கான முயற்சிகள் சரியாக எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.



இதனால், மாநில அரசுத் துறைகளும், மத்திய அரசுத் துறைகளும் இணைந்து பணியாற்றுவதில் சிக்கல் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.



வெள்ள நிவாரணப்பணிகள் அரசியலாக்கப்படுவது எப்படி? இது திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்துமா? மத்திய, மாநில அரசுத்துறைகள் இணைந்து செயல்படுவதில் உண்மையில் சிக்கல் உள்ளதா?



இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK ANNAMALAI தவெக AIADMK ADMK AMMK TAMIL NADU TTV DHINAKARAN MK STALIN டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் ANBUMANI RAMADOSS சீமான் முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் இந்திய அணி தமிழக வெற்றிக் கழகம் கனமழை தமிழகம் PMK INDIAN CRICKET TEAM ரஜினிகாந்த் பாமக UDHAYANIDHI STALIN காங்கிரஸ் PARLIAMENT ELECTION பிரதமர் மோடி கைது CONGRESS அன்புமணி ராமதாஸ் கொலை வடகிழக்கு பருவமழை EDAPPADI PALANISWAMI NELLAI சட்டசபை தேர்தல் SEEMAN அமமுக KEERTHY SURESH THOOTHUKUDI TAMILAGA VETTRI KAZHAGAM கொரோனா திருநெல்வேலி தமிழ்நாடு தென்காசி மதுரை COIMBATORE கோவை TAMIL ACTRESS OPS ELECTION COMMISSION கள்ளக்காதல் திருமாவளவன் தீபாவளி வன்னியர் பாலியல் தொல்லை தேவர் கீர்த்தி சுரேஷ் ஓபிஎஸ் THIRUMAVALAVAN MADURAI நயினார் நாகேந்திரன் NORTHEAST MONSOON நெல்லை AJITH திருப்பரங்குன்றம் TAMIL CINEMA டாப் நியூஸ் நாம் தமிழர் கட்சி ASSEMBLY ELECTIONS தமிழக அரசு டிரெண்டிங் விடுமுறை