அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள தே.மு. தி.க. தொகுதி பங்கீடு தொடர்பாக 2 கட்ட பேச்சு வார்த்தையை நடத்தி முடித்துள்ளது. கடந்த 1-ந் தேதி அன்று விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு சென்ற அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவினர் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவை சந்தித்தனர்.இதன் பின்னர் தே.மு. தி.க. குழுவினர் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்துக்கு நேரில் சென்று பேசினார்கள்.
2-ம் கட்டமாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் பேட்டி அளித்த தே.மு.தி.க. நிர்வாகிகள் வெற்றிக் கூட்டணியில் இடம் பெற்று உள்ளோம் என்று கூறினார்கள்.ஆனால் பிரேமலதா அளித்த பேட்டியில் அ.தி.மு.க.வுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று தெரிவித்தார். இதனால் குழப்பம் நிலவியது.இருப்பினும் அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடை பெற்று வந்துள்ளது. 7 எம்.பி. தொகுதிகள் மற்றும் ஒரு மேல்சபை எம்.பி. பதவியை தே.மு.தி.க. கேட்டுள்ளது.
இதில் 4 தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வருகிற 17-ந் தேதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தே.மு.தி.க.வுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் பற்றி 3-வது கட்டமாக அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே விரைவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.
இதன் பின்னர் 2 கட்சிகளின் நிர்வாகிகளும் தொகுதி உடன்பாடு தொடர்பாக நேரில் சந்தித்து கையெழுத்து போட உள்ளனர்.பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாக உள்ளது.
ஆலமரம் தூங்கஅவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க, திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
100-லிருந்து 10-ஐ எத்தனை முறை கழிக்க முடியும்?
அதட்டுவான், அலறுவான் ஆனால் கோட்டையை விட்டு வரமாட்டான் அவன் யார்?
தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம்: தமிழக அரசு
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் அவர்களே?- நயினார் நாகேந்திரன் விமர்சனம்
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக PoK மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டம்
அமித்ஷாவுடன் சந்திப்பு: கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொண்டு வெளியேறிய இ.பி.எஸ்.
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!