INDIAN 7

Tamil News & polling

கொளுத்தும் வெயில்... ஜூன் 10-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும்.. கோடை விடுமுறை நீட்டிப்பு

31 மே 2024 10:57 AM | views : 66
Nature

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் இறுதியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து வருகிற 6-ந்தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது.இந்த நிலையில், கத்திரி வெயில் முடிவடைந்தாலும், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையவில்லை.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகி வருகிறது. இதன் காரணமாக பகல் நேரங்களில் மக்களால் வெளியே நடமாட முடியாத நிலை உள்ளது. இந்த சூழலில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதியில் பள்ளிகளை திறந்தால் வெயிலின் தாக்கத்தால் மாணவர்கள் கடுமையான பாதிப்புகளை சந்திப்பார்கள் என்பதால், பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், விடுமுறையை நீட்டித்து ஜூன் 10-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏற்கெனவே வெப்பம் காரணமாக புதுவையில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Like
0
    Dislike
0



WhatsApp Share JOIN IN WHATSAPP WhatsApp Share


Image சென்னை, கடந்த சட்டசபை தேர்தலில் (2021) டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்த தே.மு.தி.க. 60 தொகுதிகளில் போட்டியிட்டது. ஆனால், ஒன்றில் கூட வெற்றி

Image தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. அதன்பிறகு,



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்